செய்திகள் :

மழைபெய்தும் நிரம்பாத ஏரிகள்; சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு வருமா?

post image

மழை பெய்தாலும், ஏரிகள் நிரம்பவில்லை..

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை பெய்தாலும்கூட சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக் கூடிய முக்கியமான ஏரிகள் முழுமையாக நிரம்பாமல் இருப்பதால் கோடைக் காலங்களில் நீர்த்தட்டுப்பாடு ஏற்படுமோ? என்ற அச்சம் சென்னைவாசிகள் மத்தியில் எழுந்திருக்கிறது.

தொடர் மழை பெய்தபோதிலும் சென்னைக்கு குடிநீர் தரும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை, வீராணம் ஆகிய ஆறு பிரதான ஏரிகளின் நீர் மட்டம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மிகவும் சரிவைச் சந்தித்திருக்கின்றன. குறிப்பாக, மொத்தமுள்ள ஆறு ஏரிகளின் முழு கொள்ளளவு 13.22 டி.எம்.சியாக இருக்கும் நிலையில், தற்போதைய நீர் இருப்பு பாதிக்கும் குறைந்து வெறும் 6.07 டி.எம்.சி என்ற அளவிலேயே இருக்கிறது. அதாவது, மொத்த கொள்ளளவில் பாதிக்கும் குறைந்து வெறும் 45.89% என்ற நிலையில் மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது.

சென்னை மழை

கடந்த ஆண்டு இதே நாளில் (15/11/2023) ஆறு ஏரிகளிலும் இருந்த மொத்த நீர் இருப்பானது 9.58 டி.எம்.சி (9580 mcft) என்ற அளவில் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி நிலவரப்படி, (15/11/2024), கடந்த ஆண்டைவிட 3.6 டி.எம்.சி நீர் இருப்பு குறைந்து வெறும் 6.07 டி.எம்.சி (6067.20 mcft) ஆக மட்டுமே இருக்கிறது. வெப்ப அலை வீசிய கடந்த ஏப்ரல் மாதத்தில் கூட, கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் வெறும் 1.5% டி.எம்.சி நீர் தான் குறைவாக இருந்தது. ஆனால், வடகிழக்கு பருவமழை காலமான நவம்பரில் இந்த இடைவெளி சுமார் 3 டி.எம்.சிக்கு அதிகமாக அதாவது இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குறைந்த நீர்மட்டம்..

குறிப்பாக, கடந்த ஆண்டு இதே நாளில்(நவம்பர் 15), பூண்டி நீர்த்தேக்கத்தில் 1862.00 (mcft) மில்லியன் கியூபிக் அடியாக இருந்த நீர் இருப்பு, தற்போது 465.00 (mcft) மில்லியன் கியூபிக் அடியாக குறைந்து காணப்படுகிறது.

அதேபோல, சோழவரம் நீர்த்தேக்கத்தில் 636.00 (mcft) மில்லியன் கியூபிக் அடியாக இருந்த நீர் இருப்பு, தற்போது 115.00 (mcft) மில்லியன் கியூபிக் அடியாக குறைந்திருக்கிறது.

புழல் நீர்த்தேக்கத்தில் 2745.00 (mcft) மில்லியன் கியூபிக் அடியாக இருந்த நீர் இருப்பு, தற்போது 2403.00 (mcft) மில்லியன் கியூபிக் அடியாக இருக்கிறது.

கண்ணன்கோட்டை தேர்வோய் கண்டிகை நீர்த்தேக்கத்தைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டு இதே நாளில் 433.00 (mcft) மில்லியன் கியூபிக் அடியாக இருந்த நீர் இருப்பு, தற்போது 303.00 (mcft) மில்லியன் கியூபிக் அடியாகவும்,

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் 3130.00 (mcft) மில்லியன் கியூபிக் அடியாக இருந்த நீர் இருப்பு, தற்போது 1889.00 (mcft) மில்லியன் கியூபிக் அடியாகவும் மிகக் குறைந்து காணப்படுகிறது.

வீராணம் ஏரி

வீராணம் நீர்த்தேக்கம்..

அதேசமயம், விதிவிலக்காக கடலூரிலிருந்து சென்னைக்கு நீர் வழங்கக்கூடிய வீராணம் நீர்த்தேக்கத்தில் மட்டும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் சற்று அதிகரித்து காணப்படுகிறது. அதாவது, கடந்த ஆண்டு இதே நாளில், 773.00 (mcft) மில்லியன் கியூபிக் அடியாக இருந்த நீர் இருப்பு, தற்போது 892.20 (mcft) மில்லியன் கியூபிக் அடியாக சற்று உயர்ந்து காணப்படுகிறது. எப்படியிருப்பினும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தற்போதைய நீர் இருப்பு மிகவும் குறைந்து காணப்படுவதால் சென்னை வாசிகள் மழைக்காலம் முடிந்து எதிர்வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பிருக்குமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.

`அஞ்சத் தேவையே இல்லை..'

இதுகுறித்து, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ``சென்னையைப் பொறுத்தவரையில் நாள்தோறும் 1040 mld (Millions of liter per day) அளவுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. முக்கியமாக, செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை, வீராணம் உள்ளிட்ட ஆறு பிரதான ஏரிகள் மூலம் சென்னையின் குடிநீர், தண்ணீர் தேவை பெரும்பாலும் பூர்த்திசெய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த நவம்பர் மாத பாதி வரை ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைவாக இருப்பதால் ஏரிகளின் நீர்மட்டமும் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும், நவம்பர் இறுதி, டிசம்பர் மாதம் முழுக்க நமக்கு மழை இருக்கிறது. இன்னமும் மழைக்காலம் பாதிகூட முடிவடையாத நிலையில், முன்முடிவாக சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு கோடைக்காலங்களில் ஏற்படுமா? என்று சந்தேகமாகக் கேட்பது சரியாக இருக்காது.

ஏரிகளின் நிலை

ஒருவேளை நீர் இருப்பு குறைந்தாலும்கூட அவற்றை சமாளிக்கூடிய தொழில்நுட்பம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நம்மிடம் இருக்கின்றன. குறிப்பாக, கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் 300 (mld) நீர் நமக்கு கிடைக்கிறது. குவாரிகள் மூலம் கிடைக்கும் 25 mld நீரையும் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். தேவைப்பட்டால், மெட்ரோ வாட்டர் போர்வெல்லிருந்து சுமார் 15 mld நீரை எடுத்துக்கொள்ளலாம். தவிர, தனியார் டேங்கர் லாரி நிறுவனங்களிடம் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தம்மூலம் தேவையான நீரை தங்கு தடையின்றி பெற்றுக்கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் நீர்த்தட்டுப்பாடு ஏற்படுமா? என்று அஞ்சத் தேவையே இல்லை!" என்றனர் உறுதியாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

மகாராஷ்டிரா தேர்தல்: அஜித்பவாரை தோற்கடிக்க, குடும்பத்தோடு பிரசாரத்தில் இறங்கிய சரத்பவார்..!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. இத்தேர்தல் பிரசாரம் நாளை முடிகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள்... பயணிகள் அதிர்ச்சி!

நெல்லையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து நெல்லைக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. நெல்லை சந்திப்பில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூ... மேலும் பார்க்க

40 ஹெலிகாப்டர், 15 விமானம்... மகாராஷ்டிரா தேர்தலில் பறந்து பறந்து பிரசாரம் செய்த தலைவர்கள்..!

மகாராஷ்டிராவில் கடந்த சில நாள்களாக நடந்து வரும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளையோடு முடிகிறது. இந்த முறை மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து பிரசாரம் செய்... மேலும் பார்க்க

``ஆர்.எஸ்.எஸ் பலிதானியை வைத்து வாக்குகேட்கிறார்கள்'' - காங்கிரஸில் சேர்ந்த பாஜக நிர்வாகி ஆவேசம்!

கேரள மாநில பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் சந்தீப் வாரியர். பாலக்காட்டைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கையில் ஊறிய குடும்பத்தைச் சேர்ந்த சந்தீப் வாரியர் கேரள மாநில பா.ஜ.க-வில் பல்வேற... மேலும் பார்க்க

Health: உங்கள் ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம் தெரியுமா?

பழங்களும் காய்கறிகளும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை என்பது அறிந்ததுதான். ஆனால், அவற்றை தினசரி உணவில் எந்தளவுக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பலரும் அறியாதது. இரவு வேளைகளில் சாப்பிடுகிற ஒரு வாழைப... மேலும் பார்க்க

``திமுகவுக்கு 12% வாக்குகள் குறையும்; அதிமுகவுக்கு 12% வாக்குகள் கூடும்" - தங்கமணி சொல்லும் கணக்கு

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்அதிமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்குவதை கண்டித்து, திருப்பரங்குன்றத்தில் கண்டன அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்... மேலும் பார்க்க