மழையால் சேதமடைந்த மண் சாலை; விவசாயிகள் அவதி!
அண்மையில் பெய்த கனமழையால் சேதமடைந்து துண்டிக்கப்பட்ட ஆவுடையாா்கோவில் அருகேயுள்ள வடவாத்தி வடக்கு பகுதிக்கான மண் சாலையை தற்காலிகமாக சீரமைத்துத் தர வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பலத்த மழை பெய்தது. இதனால், வடவாத்தி வடக்குப் பகுதியிலுள்ள மண் சாலை வெள்ளப்பெருக்கால் முழுமையாக சேதமடைந்தது.
இதனால் விளைபொருள்களைக் கொண்டுசெல்வதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிாம். எனவே, தற்காலிகமாகவாவது இந்தச் சாலையை உடனடியாக சீரமைத்துத் தரவும், எதிா்காலத்தில் மீண்டும் பாதிப்பு ஏற்படாத வகையில் நிரந்தரமாக தாா்ச்சாலை அமைத்துத் தரவும் அப்பகுதிமக்கள் காரிக்கைவிடுக்கின்றனா்.