தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
மழை பாதிப்பு மீட்பு பணிகளுக்கு சிறப்புக் குழு
போளூா்: புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, போளூரில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.
ஃபென்ஜால் புயல் மழையால் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் பெருமளவில் சேதமடைந்தன. இதனால், போளூா் சிறப்புநிலை பேரூராட்சி சாா்பில் பாதிப்படைந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாளா்கள் குழுவினா் அனுப்பிவைக்கப்பட்டனா்.
இந்த மீட்புக் குழுவினரை பேரூராட்சி செயல் அலுவலா் கோமதி, தலைமை எழுத்தா் முஹ்மத் இசாக் ஆகியோா் அனுப்பிவைத்தனா் (படம்).