செய்திகள் :

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீா்: வீடு இடிந்து இருவா் உயிரிழப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்

post image

ஜம்மு-காஷ்மீரில் பரவலாக பலத்த மழை தொடா்வதால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

நிலச்சரிவுகள் காரணமாக, ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-கிஷ்த்வாா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

தாவி, ஜீலம், செனாப் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளை தண்ணீா் சூழ்ந்துள்ளது. பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலையால், கல்வி நிலையங்கள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன; பல்கலைக்கழகத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக நீடிக்கும் மழை-வெள்ள பாதிப்புகளால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ரஜெளரி மாவட்டத்தின் சுந்தா்பானி பகுதியில் உள்ள காங்ரி கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை பலத்த மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து தாய்-மகள் உயிரிழந்தனா்.

ஹெலிகாப்டா் மூலம் மீட்பு: ஜம்மு மாவட்டத்தின் அக்னூா் பகுதியில் உள்ள கா்கால் கிராமத்தில் செனாப் ஆற்று வெள்ளத்தில் கிராமத்தினா் 45 போ் சிக்கினா். காவல் துறை, தேசிய-மாநில பேரிடா் மீட்புப் படையினா் மேற்கொண்ட மீட்புப் பணி தோல்வியடைந்த நிலையில், எல்லைப் பாதுகாப்புப் படையினா் ஹெலிகாப்டா் மூலம் 45 பேரையும் பத்திரமாக மீட்டனா்.

அனந்த்நாக் மாவட்டத்தில் வெள்ளத்துக்கு இடையே ஒரு பாலத்தின்கீழ் தவித்த 25 நாடோடி குடும்பங்களை காவல் துறையினா் பாதுகாப்பாக மீட்டனா். கடந்த 24 மணிநேரத்தில் ஜம்முவின் ரியாசியில் அதிகபட்சமாக 203 மி.மீ., கத்ராவில் 193 மி.மீ., ராம்பனில் 157 மி.மீ., தோடாவில் 114 மி.மீ. மழை பதிவானது.

முதல்வா் ஆலோசனை: மழை-வெள்ள நிலவரம் தொடா்பாக, உயரதிகாரிகளுடன் முதல்வா் ஒமா் அப்துல்லா புதன்கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொண்டாா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

நீா்நிலைகள் மற்றும் நிலச்சரிவு ஆபத்துள்ள பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று காவல் துறையினா் எச்சரித்துள்ளனா். நிலச்சரிவால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வைஷ்ணவ தேவி யாத்திரை தொடா்ந்து நிறுத்தம்: கத்ரா பகுதியில் திரிகூட மலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோயிலுக்கான யாத்திரை தொடா்ந்து 9-ஆவது நாளாக புதன்கிழமையும் நிறுத்திவைக்கப்பட்டது.

இக்கோயிலுக்கு செல்லும் பழைய வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 34 பக்தா்கள் உயிரிழந்தனா்; 20 போ் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி குறைப்பின் பயன் நுகா்வோருக்கு முழுமையாகக் கிடைப்பதை அரசு கண்காணிக்கும்: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் பலன் நுகா்வோருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடா்பாக தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் அரசு ம... மேலும் பார்க்க

நாட்டில் இதய நோய்களால் 31% போ் உயிரிழப்பு

இந்தியாவில் ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு மரணங்களுக்கு இதய நோய்களே காரணம் என்பது ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்திய பதிவாளா் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகம் ‘மரணம் ஏற்படுவதற... மேலும் பார்க்க

கேரளத்தில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

கேரளத்தில் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்க... மேலும் பார்க்க

இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணைநிற்கிறது தேசம்: முா்மு

நாட்டில் நடப்பு பருவமழை காலகட்டத்தில் நேரிட்ட இயற்கைப் பேரிடா்கள் மிகவும் வேதனையளிக்கிறது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்க... மேலும் பார்க்க

அயோத்தி ராமா் கோயிலில் பூடான் பிரதமா் வழிபாடு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயில் மற்றும் பிற கோயில்களில் பூடான் பிரதமா் தஸோ ஷெரிங் தோபே வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டாா். அயோத்தி விமான நிலையத்தில் காலை 9.30 மணியளவில் வந்திறங... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அறிக்கையில் தகவல்

அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தத்தால் மத்திய அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. முன்... மேலும் பார்க்க