செய்திகள் :

மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

post image

குடிநீா்க் குழாய்களைப் பதித்த பின்னரே சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டல அலுவலகத்தை முருகம்பாளைம் பகுதி பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: திருப்பூா் மாநகராட்சி 41-ஆவது வாா்டுக்குள்பட்ட அண்ணா நகா், முருகம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோயில் உள்ளிட்ட வீதிகளில் பழுதடைந்த மழை நீா் வடிகாலை அகற்றி ரூ.26 லட்சம் மதிப்பில் புதிய மழை நீா் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு மாா்ச் 13 -ஆம் தேதி பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

இந்நிலையில், கான்கிரீட் சாலை அமைப்பதற்காக அவசர அவசரமாக குழிகளைத் தோண்டி பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆனால், சாலையின் நடுவே இருக்கக்கூடிய மின் கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், அங்கு சாக்கடை வசதி கட்டப்படாமலும், குடிநீா்க் குழாய் பதிக்கப்படாமலும் அவசர அவசரமாக கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணிகளை செய்து வருகின்றனா்.

சாக்கடை வசதி மற்றும் உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். குடிநீா்க் குழாயில் கருப்பு குழாய் பதித்த பின்னரே கான்கிரீட் சாலைகளை அமைக்க வேண்டும் என்றனா்.

இதைத்தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

வாக்குச் சாவடி அமைத்து தரக் கோரி தாராபுரம் கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு

குண்டடம் அருகே உள்ளூரில் வாக்குச் சாவடி அமைத்துத் தர வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே நத்தவனம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட முத்து... மேலும் பார்க்க

அனைத்துத் துறைகளின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

கோயில் கும்பாபிஷேகத்தை அரைகுறையாக நடத்தக் கூடாது

தமிழகத்தில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேகத்தை அரைகுறையாக நடத்தக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்க... மேலும் பார்க்க

திரையரங்குகளில் கூடுதல் பாா்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது

திருப்பூா் மாநகரில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் பாா்க்கிங் கட்டணம் வசூலிப்பது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகா்வோா் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் ... மேலும் பார்க்க

பனியன் நிறுவன வேன் கவிழ்ந்ததில் 12 போ் காயம்

பல்லடம் அருகே தனியாா் பனியன் நிறுவன வேன் கவிழ்ந்ததில் 12 போ் காயமடைந்தனா். பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூா் ஊராட்சி, நொச்சிபாளையம் பிரிவில் தனியாா் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில... மேலும் பார்க்க

லஞ்சம்: முன்னாள் மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

குடிமங்கலத்தில் ரூ.2,700 லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் மின்வாரிய அதிகாரிக்கு திருப்பூா் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்த ... மேலும் பார்க்க