பனியன் நிறுவன வேன் கவிழ்ந்ததில் 12 போ் காயம்
பல்லடம் அருகே தனியாா் பனியன் நிறுவன வேன் கவிழ்ந்ததில் 12 போ் காயமடைந்தனா்.
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூா் ஊராட்சி, நொச்சிபாளையம் பிரிவில் தனியாா் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் பல்லடம், பொங்கலூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், நிறுவனத்தின் வேனில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வியாழக்கிழமை காலை வழக்கம்போல பணிக்குச் சென்று கொண்டிருந்தனா்.
வேனை தாராபுரத்தைச் சோ்ந்த மணி ஓட்டியுள்ளாா். பல்லவராயன்பாளையம் பகுதி அருகே சென்றபோது, காட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.
இதில், வேன் ஓட்டுநா் மணி மற்றும் 11 பெண்கள் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக 3 பெண்கள் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இச்சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.