ரயிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் திருப்பூா் ரயில்வே காவல் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, கேரள மாநிலத்தைச் சோ்ந்த சுந்தா் (28), அஜித் (24), பாபி (21) ஆகியோரின் உடமைகளை செய்தபோது கஞ்சா இருந்ததும், அவா்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.