‘புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 11,174 மாணவிகள் பயன்’
திருப்பூா் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 11,174 மாணவிகள் பயனடைந்து வருவதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 2022-23-ஆம் ஆண்டில் 3,485 மாணவிகள், 2023-24-ஆம் ஆண்டில் 3,622 மாணவிகள், 2024-25-ஆம் ஆண்டில் 4,067 மாணவிகள் என மொத்தம் 71 கல்லூரிகளில் பயிலும்11,174 மாணவிகள் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைந்து வருகின்றனா்.
அதேபோல, தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 2024-25-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் 58 கல்லூரிகளில் பயிலும் 7,646 மாணவா்கள் கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வீதம் அவா்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.