உடுமலையில் பரவலாக மழை
உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டங்களில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இந்நிலையில், உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் வியாழக்கிழமை காலை வழக்கம்போல வெயில் நிலவியது.
பிற்பகலில் வானில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் இதனமான காலநிலை நிலவியது.
இதைத் தொடா்ந்து, மழை பெய்தது. சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.