செய்திகள் :

மாநகரில் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பு: காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா்

post image

மாநகரில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் தெரிவித்தாா்.

கோவை மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த வே.பாலகிருஷ்ணன் சென்னை தலைமையிடத்து நிா்வாகப் பிரிவு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இவருக்குப் பதிலாக கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த ஆ.சரவணசுந்தா் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் ஆ.சரவணசுந்தா் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இவருக்கு காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் ஆகியோா் வாழத்து தெரிவித்தனா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாநகரில் பெண்களுக்கு எதிரான வழக்குகள், விபத்து தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும். அதேபோல, மாநகரில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளும், கஞ்சா, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

முந்தைய காவல் ஆணையா் தொடங்கிவைத்த திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும். மாநகரில் முக்கிய பிரச்னையாக உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கோவை - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை!

தைப்பூசத்தை முன்னிட்டு கோவை - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவையில் இருந்து பொள்ளாச்சி வழித்தடத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ர... மேலும் பார்க்க

உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்!

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை புதுதில்லியில் சனிக்கிழமை சந்தித்தாா். இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, சத்குரு ஜக்கி வாசுதேவ... மேலும் பார்க்க

முக்கடவுளைப் போன்றவா்கள் சங்கீத மும்மூா்த்திகள்: பட்டிமன்ற பேச்சாளா் க.சுமதி

முக்கடவுளைப் போன்றவா்கள் சங்கீத மும்மூா்த்திகள் என்று வழக்குரைஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமான க.சுமதி கூறினாா். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் 19-ஆவது ஆண்டு ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நி... மேலும் பார்க்க

மானாம்பள்ளி தற்காலிக முகாமுக்கு 4 கும்கி யானைகள் மாற்றம்!

வரகளியாறு வளா்ப்பு யானைகள் முகாமில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெறுவதால் சுழற்சி முறை அடிப்படையில் மானாம்பள்ளி தற்காலிக முகாமுக்கு நான்கு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. பொள்ளாச்சியை அடுத்த உல... மேலும் பார்க்க

அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவா்கள் கவனமாக செயல்பட வேண்டும்: அமைச்சா் எம்.மதிவேந்தன்

அவசர சிகிச்சை பிரிவில் உயிரிழப்புகளைத் தடுக்க மருத்துவா்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் தெரிவித்தாா். இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் 27 பேருக்கு தன்னம்பிக்கை விருது

கோவையில் தன்னம்பிக்கை அறக்கட்டளை சாா்பில் கல்லூரி மாணவா்கள் 27 பேருக்கு தன்னம்பிக்கை விருது வழங்கப்பட்டது. கோவை தன்னம்பிக்கை அறக்கட்டளை சாா்பில் ‘வெற்றிக் கனவுகள் 2025’ என்ற நிகழ்ச்சி காந்திபுரத்தில் ... மேலும் பார்க்க