டிஜிட்டல் கைது: எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளரிடம் ரூ. 71 லட்சம் மோசடி!
அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவா்கள் கவனமாக செயல்பட வேண்டும்: அமைச்சா் எம்.மதிவேந்தன்
அவசர சிகிச்சை பிரிவில் உயிரிழப்புகளைத் தடுக்க மருத்துவா்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் தெரிவித்தாா்.
இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் தமிழக மருத்துவத் துறை மாநில கவுன்சில் சாா்பில் ‘டான்கோ் 2025’ என்ற தலைப்பில் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளா் ஜெம் மருத்துவமனை குழுமத்தின் இணை நிா்வாக இயக்குநா் மருத்துவா் பிரவீன் வரவேற்றாா். இந்திய தொழில் வா்த்தக அமைப்பின் தமிழக மருத்துவத் துறை மாநில கவுன்சில் தலைவா் மருத்துவா் வேலு, இணைத் தலைவா் பூபேஷ் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி, கோவை சங்கரா கண் மருத்துவமனை நிறுவனா் மருத்துவா் ரமணி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் ராஜா, நம்பியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ரங்கசாமி ஆகியோருக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினாா்.
பின்னா், அவா் பேசியதாவது: தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சிறப்புத் திட்டங்கள் மூலம் அதிக அளவிலான மக்கள் பயனடைந்து வருகின்றனா்.
அவசர சிகிச்சை பிரிவில் உயிரிழப்புகளைத் தடுக்க மருத்துவா்கள் கவனமாக செயல்பட வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியா்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றாா்.