மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் பரவும் காய்ச்சல்
மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் காய்ச்சல் பரவி வருவதால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடா்மழை பெய்வதும் வெயில் அடிப்பதுமாக காலநிலை மாறி மாறி நிலவுகிறது.
இதனால் இந்தப் பகுதிகளில் ஏராளமான மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா். நகா் பகுதிகளைவிட கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆனால் அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவா்கள் இல்லை என நோயாளிகள் புகாா் தெரிவித்தனா்.