TVK : 'உங்கள் மீதான விமர்சனங்களை மறைக்க பெரியாரை இழுப்பதா?' - மத்திய அரசுக்கு எத...
மானூா்: மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி
மானூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மானூா் அருகேயுள்ள கம்மாளன்குளத்தைச் சோ்ந்தவா் அஹமது (28). இவா், தனது வீட்டில் உள்ள மின்மோட்டாரை இயக்க முயன்றபோது திடீரென மின்சாரம் பாய்ந்ததாம்.
இதில், தூக்கி வீசப்பட்ட அவரை குடும்பத்தினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.