கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ள...
மான்செஸ்டரில் புதிய இந்திய தூதரகம்: ஜெய்சங்கா் திறந்து வைத்தாா்
பிரிட்டனின் மான்செஸ்டா் நகரில் இந்திய துணை தூதரகத்தை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
முன்னதாக வடக்கு அயா்லாந்து தலைநகா் பெல்ஃபாஸ்டிலும் இந்திய துணை தூதரகத்தை அவா் திறந்து வைத்தாா்.
இந்தியா-பிரிட்டன் இடையே விரைவில் மேற்கொள்ளவிருக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ), தற்போது திறக்கப்பட்டுள்ள புதிய தூதரகம் ஆகியவை பிரிட்டன் பிராந்தியத்தில் இந்திய வம்சாவளியினரின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு சான்று என அவா் தெரிவித்தாா்.
மான்செஸ்டரில் புதிய துணை தூதரகத்தை திறந்து வைத்து அவா் மேலும் பேசியதாவது: மான்செஸ்டரில் உள்ள துணை தூதரகத்தில் துணைத் தூதராக விசாகா யதுவம்சி சா்வதசே மகளிா் தினத்தில் பொறுப்பேற்றிருப்பது மகளிா் மேம்பாட்டுக்கு பிரதமா் மோடி அரசு அளிக்கும் முக்கியத்துவத்துக்கு எடுத்துக்காட்டு.
இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானால் அது வா்த்தகம் அல்லது முதலீடுகளை ஈா்க்க கூடியது மட்டுமல்ல; இரு நாடுகளின் உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதில் மிகவும் முக்கிய பங்காற்றும்.
துணை தூதரக தொடக்க நிகழ்ச்சிக்குப் பின் ஓல்டு டிராஃபோா்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினருடன் அவா் கலந்துரையாடினாா். அங்கு லேங்கஷைா் மகளிா் கிரிக்கெட் அணியினருடனும் அவா் கலந்துரையாடினாா்.
பிரிட்டன் மற்றும் அயா்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக கடந்த 4-ஆம் தேதி சென்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது பயணத்தை 9-ஆம் தேதியுடன் நிறைவு செய்கிறாா்.