செய்திகள் :

மான்செஸ்டர் ஜெப ஆலய தாக்குதலுக்கு யார் காரணம்? - விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

post image

இங்கிலாந்தின் மான்செஸ்டர் ஜெப ஆலயத்துக்கு வெளியே நடந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்:

  • நேற்று (2-ம் தேதி) 09:30 மணிக்குப் பிறகு ஹீட்டன் பார்க் ஹீப்ரு சபை ஜெப ஆலயத்திற்கு வெளியே பொதுமக்களை நோக்கி ஒரு கார் ஓட்டிச் செல்லப்பட்டது.

  • பின்னர் ஓட்டுநர் வாகனத்திலிருந்து இறங்கி மக்களைக் தாக்கத் தொடங்கினார்.

 மான்செஸ்டர் ஜெப ஆலய தாக்குதல்
மான்செஸ்டர் ஜெப ஆலய தாக்குதல்
  • இந்த தாக்குதலில் க்ரம்ப்சால் பகுதியைச் சேர்ந்த அட்ரியன் டால்பி (53) மெல்வின் கிராவிட்ஸ் (66) இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் மூன்று பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

  • அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவலளித்தனர். அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை தாக்குதல் நடத்தியவரை சுட்டுக் கொன்றனர்.

  • பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

  • தாக்குதல் நடத்தியவர் தொடர்பாக காவல்துறை வெளியிட்ட தகவலில், 35 வயதான ஷாமி என்பதும், அவர் சிரியா வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் தற்போது பிரிட்டிஷ் குடியுரிமைப் பெற்றவர்.

  • சுட்டுக்கொல்லப்பட்டவரின் இடுப்பில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் காணப்பட்டதை அடுத்து வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு நிறுத்தப்பட்டது.

  • அந்த சாதனம் செயல்படாதது என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

 மான்செஸ்டர் ஜெப ஆலய தாக்குதல்
மான்செஸ்டர் ஜெப ஆலய தாக்குதல்
  • இந்தக் கொடூரச் செயல்களுக்குத் துண்டியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 60 வயது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

  • தாக்குதலுக்கான நோக்கம், காயமடைந்தவர்களின் அடையாளங்கள், காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் அடையாளங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடவில்லை.

ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்டப்பட்டதால் சர்ச்சை

ராமநாதபுரத்தில் நீண்ட காலமாக ரயில் நிலையம் எதிரே நகராட்சிக்குச் சொந்தமான அண்ணா பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்டபோது போதிய வசதிகளுடன் வாராந்திர சந்தை பகுதியில் புதிய பேருந்து ... மேலும் பார்க்க

"நாயக வழிபாடு, கும்பல் மனநிலை; எப்போது முழுமையான தலைவராவார் விஜய்?" - உளவியல் ஆலோசகர் சிந்து பேட்டி

கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பயணம், 41 மரணங்களுடன் சோகமான நிகழ்வாக முடிவடைந்திருக்கிறது. இந்த அசம்பாவிதத்திற்கு தவெக-வின் முறைப்படுத்தப்படாத செயல்பாடுகளும் விஜய்யின் கால தாமதமு... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை; ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்" - உயர் நீதிமன்றம்

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியில் அரசியல் ரீதியான ... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு பாஜக கடிதம்

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்... மேலும் பார்க்க

'கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், திருவண்ணாமலைக்கு செல்லாத நீங்கள்...' - ஸ்டாலினை விமர்சிக்கும் அண்ணாமலை

கரூரில் நடந்த சம்பவத்தை விசாரிக்க எம்.பி குழுவை அமைக்கப்பட்டதை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலையில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்வினையாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "தள்ளு, தள்ளு" - வெள்ள பாதிப்பைப் பார்க்கப் போன MP; படகில் வைத்து தள்ளிச் சென்ற மக்கள்

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக சோலாப்பூர், அகில்யா நகர் மற்றும் மராத்வாடா பகுதியில் பல லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.நெற்பயிர்கள், பழப்பயிர்கள் என விவசாயிகளின் ஒ... மேலும் பார்க்க