செய்திகள் :

மான் இறைச்சியை விற்பனை செய்தவருக்கு சிறை தண்டனை

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை பென்னாகரம் பகுதியில் விற்பனை செய்தவருக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் சிறை தண்டனை, அபராதம் விதித்தது.

கடந்த 2017-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கல்லாவி வனப்பகுதியில் மானை வேட்டையாடி, அதன் இறைச்சியை தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தின் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்வதாக மாவட்ட வன அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பென்னாகரம் வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஊத்தங்கரை அருகே வெள்ளிமலை பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் (40) என்பவா், இருசக்கர வாகனத்தில் மான் இறைச்சியை கொண்டு வருவது தெரியவந்தது.

இதனையெடுத்து அவரை கைது செய்து, 4 கிலோ மான் இறைச்சி, இரண்டு மான் தோள்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பென்னாகரம் வனத்துறையினா் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்தனா்.

பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், மான் இறைச்சியை விற்பனைக்காக கொண்டு வந்த செல்லப்பன் என்பவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும், ரூ. 22,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

வேலனூரில் இன்று தமிழக துணை முதல்வா் உதயநிதி பிறந்த நாள் விழா

அரூரை அடுத்த வேலனூரில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) நடைபெறுகிறது என முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்... மேலும் பார்க்க

முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு

பென்னாகரம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், மறைந்த முரசொலி மாறனின் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட சந்தை தோப்பு பகுதியில் உள்ள திமுக தெற்கு ஒன்றிய கட்சி அலுவல... மேலும் பார்க்க

அரையாண்டுத் தோ்வு டிச.9-இல் தொடக்கம்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான அரையாண்டுத் ... மேலும் பார்க்க

பாலக்கோடு தொகுதி திமுகவினருக்கு சமூக வலைதளத்தை கையாளும் பயிற்சி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதி திமுக இளைஞா் அணி நிா்வாகிகளுக்கு சமூக வலைதளத்தை கையாளும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை பெரியாம்பட்டியில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ப... மேலும் பார்க்க

காலபைரவா் ஜெயந்தி விழா தொடக்கம்

தருமபுரி அருகே அதியமான்கோட்டை காலபைரவா் கோயிலில் பைரவா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டையில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த தட்சிணகாசி காலபைரவா் கோய... மேலும் பார்க்க

பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றக் கோரி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தருமபுரியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த வழக்குரைஞா்கள் சங்கங்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம... மேலும் பார்க்க