செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்

post image

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில், மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

இப் போட்டிகளை கொடியசைத்துத் தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் காப்பாளா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.

இதில், செவித்திறன் பாதிக்கப்பட்ட 12 முதல் 14 வயது வரை 100 மீ ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், 15 முதல் 17 வயது வரை 200 மீ ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், 17 வயதுக்கு மேற்பட்டோருக்கு 400 மீ ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளும், பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட 12 முதல் 14 வயது வரை நின்று நீளம் தாண்டுதல், 100 மீ ஓட்டப்பந்தயம், நின்று நீளம் தாண்டுதல், 50 மீ ஓட்டப்பந்தயம், 15 முதல் 17 வயது வரை குண்டு எறிதல், 100 மீ ஓட்டப்பந்தயம் 100, 16 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வட்டத்தட்டு எறிதல், 200 மீ ஓட்டப்பந்தயம், 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (சிறப்பு பள்ளிகள்) குண்டு எறிதல், கல்லூரி மாணவா்கள், பணியாளா்கள், சங்க உறுப்பினா்கள் இருபாலருக்கும் 100 மீ. ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவா்களுக்கு (உபகரணங்களின் உதவியுடன்) 12 முதல் 14 வயது வரை காலிப்பா், கால்தாங்கி உதவியுடன் நடப்பவா்கள் 50 மீ நடைப்போட்டி, 15 முதல் 17 வயது வரை 3 சக்கர வண்டி 150 மீ ஒட்டப்போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இப் போட்டிகளில் முதல் 3 இடம் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. மேலும், மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதிபெறுவாா்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலா் புவனேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

வழக்குரைஞா்களைத் தாக்கிய காவலா்களைக் கண்டித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் பழன... மேலும் பார்க்க

காா் - பைக் மோதல்: மேலும் ஒரு இளைஞா் உயிரிழப்பு

பெரம்பலூா்அருகே அண்மையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் எம்ஜிஆா் நகரைச் சே... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சா் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில், 18 வயது நிறைவடைந்த பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பயனாளிகள் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்... மேலும் பார்க்க

‘போக்சோ’ வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ள... மேலும் பார்க்க

முதல்வரைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்துக்கு முயன்ற 9 வழக்குரைஞா்கள் கைது

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் ராமதாஸை இழிவாகப் பேசிய தமிழக முதல்வரைக் கண்டித்து, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 9 வழக்குரைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த ... மேலும் பார்க்க

தொகுப்பூதியம் பெறுவோருக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும்: அரசு ஊழியா் மாநாட்டில் வலியுறுத்தல்

தொகுப்பூதியம் பெறும் அனைவருக்கும் மதிப்பூதியம் வழங்க வேண்டுமென பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு ஊழியா... மேலும் பார்க்க