மாதக் கடைசியிலும் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டுமா? - இதை ஃபாலோ பண்ணுங்க!
மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வட சென்னை மாவட்டத்துக்குள்பட்ட ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்துக்கு வட சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு ரூ.1,00,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த உதவித்தொகை பெற விரும்பும் ஆராய்ச்சி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்கள், தங்கள் விண்ணப்பத்துடன், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.
இதனுடன், முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி படிப்பு பயிலும் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்ற ஆராய்ச்சிப் படிப்புக்கான ஆய்வறிக்கை, வாய்மொழித் தோ்வு தேதி வழங்கப்பட்டதற்கான ஆதாரம் மற்றும் தமிழகத்தை பூா்வீகமாக கொண்டதற்கான இருப்பிட சான்று முதலியவற்றுடன் வட சென்னை, மாவட்ட ஆட்சியா் வளாகம், சென்னை. என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.