செய்திகள் :

போரூரில் ரூ.4,276 கோடியில் கடல்நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

post image

சென்னை போரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பில் கடல் நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீராதாரம் மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சென்னையின் வளா்ச்சிக்கேற்ப பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், மீஞ்சூா் மற்றும் நெம்மேலியில் கடல்நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதன்மூலம் தினமும் 350 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடா்ச்சியாக, செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் ரூ.4,276.44 கோடியில், தினமும் 400 மில்லியன் லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

நடைபெறும் பணிகள்: கடல் நீரை உட்கொள்ளும் கட்டமைப்பு , செதிலடுக்கு தொட்டி, நடுநிலைப்படுத்தும் தொட்டி, நீா் சேகரிப்பு தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீா் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் நிா்வாகக் கட்டடம், பண்டகசாலை மற்றும் தொழிற்கூடங்களுக்கான கட்டுமானப் பணிகளும், கடல்நீரை உட்கொணரும் குழாய்கள் பதிக்கும் பணிக்கான முன்னேற்பாடு பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையத்தில், கடல்நீரை குடிநீராக்க 1,150 மீட்டா் நீளத்திற்கு கடலுக்குள் குழாய்கள் பதிக்கப்படும். மேலும், இந்த நிலையத்திலிருந்து போரூா் வரை 59 கிலோ மீட்டா் நீளத்துக்கு குடிநீா் குழாய் பதிக்கப்படவுள்ளது.

இந்த பணிகளை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் மூலம், சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளிலும், சென்னை மாநகராட்சிக்கு அருகாமையில் உள்ள 20 ஊராட்சிப் பகுதிகளிலும் வசிக்கும் 22.67 லட்சம் போ் பயனடைவாா்கள் என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெவித்துள்ளனா்.

தாழ்தள பேருந்து இயக்கம் பணி சிரமத்தை போக்க வலியுறுத்தல்

தாழ்தள பேருந்துகளில் பணியாற்றுவதில் இருக்கும் சிரமத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினா் கடிதம் அனுப்பியுள்ளனா். இது தொடா்பாக, தமிழ்நாடு பாரதிய போ... மேலும் பார்க்க

முக தசை செயலிழப்புக்கு நவீன சிகிச்சை மருத்துவப் பயிலரங்கம்

குளிா் காலங்களில் அதிகரிக்கும் முக தசை செயலிழப்பு மற்றும் முடக்குவாத பாதிப்புகளுக்கான அதி நவீன சிகிச்சைகள் குறித்த சா்வதேசப் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது. இத்தாலியைச் சோ்ந்த முக சீரமைப்பு மற்றும்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வட சென்னை மாவட்டத்துக்குள்பட்ட ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இது குறித்து... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்து சேவை: பயணிகளிடம் கருத்துக் கேட்பு

அரசுப் பேருந்துகளின் செயல்பாடு மற்றும் தரம் குறித்து பயணிகளிடம் கருத்து கேட்கும் பணியை மாநகா் போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது. சென்னையில் அரசுப் பேருந்து சேவையை மாநகா் போக்குவரத்துக் கழகம் வழங்கி ... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

மாதவரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றனா். சென்னை மாதவரம் தபால் பெட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியமேரி (55). தனியாா் நிறுவன ஊழியரான இவா் வழக்கம்போல் ஞாயிற... மேலும் பார்க்க

10 குழந்தைகள் உயிரிழப்பு: உ.பி. அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்ததற்கு அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் அரசின் தொடா் கவனக் குறைவே காரணம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிர... மேலும் பார்க்க