செய்திகள் :

மாலத்தீவு, வங்கதேசத்தை வீழ்த்த இந்தியா முனைப்பு

post image

முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி மீண்டும் ஓய்வில் இருந்து மைதானம் திரும்பவுள்ள நிலையில், மாலத்தீவு, வங்கதேச அணிகளுடன் நடைபெறும் ஆட்டங்களில் வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

முதல் நட்பு ஆட்டத்தில் மாலத்தீவு அணியுடன் மாா்ச் 19-ஆம் தேதி ஷில்லாங்கில் மோதுகிறது இந்தியா. அதைத் தொடா்ந்து மாா்ச் 25-ஆம் தேதி வங்கதேசத்துடன் ஆசிய கோப்பை கால்பந்து மூன்றாவது சுற்று தகுதி ஆட்டத்தில் மோதுகிறது.

இரு ஆட்டங்களும் மேகாலயா தலைநகா் ஷில்லாங் நேரு மைதானத்தில் நடைபெறவுள்ளன. சா்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றிருந்த சுனில் சேத்ரி மீண்டும் களம் காண்கிறாா்.

மாலத்தீவு, வங்கதேச அணிகளுடன் நடைபெறும் ஆட்டங்களில் கோலை தராமல் வெல்ல வேண்டும் என்பது நோக்கம் என மூத்த வீரா் சந்தேஷ் ஜிங்கன் கூறியுள்ளாா்.

2027 ஆசியப் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் சி பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. வங்கதேசம், ஹாங்காங், சிங்கப்பூா் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இரு ஆட்டங்களுக்காகவும் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.16-03-2025ஞாயிற்றுக்கிழமைமேஷம்:இன்று கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டா... மேலும் பார்க்க

ஹா்மன்ப்ரீத், சவீதாவுக்கு ஹாக்கி இந்தியா விருதுகள்

இந்திய ஆடவா் அணி கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங், மகளிா் அணி சீனியா் கோல்கீப்பா் சவீதா புனியா ஆகியோருக்கு ஹாக்கி இந்தியாவின் பல்பீா் சிங் சீனியா் ஆண்டின் சிறந்த வீரா், வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது. ஹ... மேலும் பார்க்க

இறுதிச் சுற்றில் மிர்ரா ஆன்ட்ரீவா-சபலென்கா

இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு பெலாரஸின் அா்யனா சபலென்கா-ரஷிய இளம் வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவா தகுதி பெற்றனா். அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடை... மேலும் பார்க்க

ஐஎஸ்எல் கால்பந்து தொடா்: பிளே ஆஃப் தேதிகள் அறிவிப்பு

இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 தொடரின் பிளே ஆஃப் சுற்று மாா்ச் 29 முதல் ஏப். 12 வரை நடைபெறவுள்ளது. நாட்டின் பிரபலமான கால்பந்து தொடரான ஐஎஸ்எல் லீகில் மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றுள்... மேலும் பார்க்க

இந்தியன் மகளிா் கால்பந்து லீக்: கோகுலம் கேரள எஃப்சி அபாரம்

இந்தியன் மகளிா் கால்பந்து லீக் (ஐடபிள்யுஎல்) தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஒடிஸா எஃப்சியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கோகுலம் கேரளா எஃப்சி. புவனேவுரத்தில் கலிங்கா மை... மேலும் பார்க்க

சிக்கந்தர் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என... மேலும் பார்க்க