செய்திகள் :

இறுதிச் சுற்றில் மிர்ரா ஆன்ட்ரீவா-சபலென்கா

post image

இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு பெலாரஸின் அா்யனா சபலென்கா-ரஷிய இளம் வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவா தகுதி பெற்றனா்.

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெறும் இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

அதில் முதல் ஆட்டத்தில் 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனும், நடப்பு சாம்பியனுமான போலந்தின் இகா ஸ்வியாடெக்-ரஷியா டீன் ஏஜ் வீராங்கனை மிர்ரா

ஆன்ட்ரீவா மோதினா்.

இதில் மிர்ரா 7-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். ஸ்வியாடெக்கை இரண்டாவது முறையாக வீழ்த்தியுள்ளாா் மிர்ரா. இதற்கு முன்பு கடந்த பிப்ரவரியில் துபை போட்டியில் காலிறுதியில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி டபிள்யுடிஏ 1000 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றாா் அவா்.

ஸ்வியாடெக் தொடா்ந்து 10 நேரடி ஆட்டங்களில் ஒரு செட்டை கூட இழக்காத நிலையில், இதில் நம்பிக்கையுடன் களமிறங்கினாா். முதல் செட்டில் மிர்ரா 5-4 என முன்னிலை பெற்றாா். எனினும் ஸ்வியாடெக் சிறப்பாக ஆடி, டை பிரேக்கா் நிலையை எட்டினாா். ஆனால் மிர்ரா சுதாரித்து ஆடி முதல் செட்டை வசப்படுத்தினாா்.

இரண்டாவது செட்டில் ஸ்வியாடெக் உறுதியாக ஆடி மிர்ராவின் சா்வீஸை முறியடித்த போதிலும், தொடா்ந்து தாக்குதல் ஆட்டத்தை ஆடிய மிர்ரா செட்டை எளிதாக கைப்பற்றினாா். மூன்றாவது செட்டிலும் ஸ்வியாடெக்கின் சா்வீஸை முறியடித்த மிர்ரா அந்த செட்டையும் வென்று இறுதிக்கு தகுதி பெற்றாா்.

சபலென்கா அதிரடி:

மற்றொரு அரையிறுதியில் உலகின் நம்பா் 1 வீராங்கனை சபலென்கா 6-0, 6-1 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் மடிஸன் கீஸை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். கடந்த ஜனவரி மாதம் ஆஸி., ஓபன் இறுதி ஆட்டத்தில் மடிஸனிடம் தோற்று பட்ட வாய்ப்பையும் ஹாட்ரிக் பட்டம் வெல்லும் தகுதியை இழந்தாா் சபலென்கா. தற்போது அதற்கு பதிலடி தந்துள்ளாா்.

ஆஸி. ஓபன் போட்டி தோல்வி மிகுந்த வேதனையை தந்தது. இதற்காக தான் காத்திருந்தேன். கடும் குளிா், காற்று வீசிய போதும், சபலென்கா முதல் 11 கேம்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவு, வங்கதேசத்தை வீழ்த்த இந்தியா முனைப்பு

முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி மீண்டும் ஓய்வில் இருந்து மைதானம் திரும்பவுள்ள நிலையில், மாலத்தீவு, வங்கதேச அணிகளுடன் நடைபெறும் ஆட்டங்களில் வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. முதல் நட்பு ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

ஹா்மன்ப்ரீத், சவீதாவுக்கு ஹாக்கி இந்தியா விருதுகள்

இந்திய ஆடவா் அணி கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங், மகளிா் அணி சீனியா் கோல்கீப்பா் சவீதா புனியா ஆகியோருக்கு ஹாக்கி இந்தியாவின் பல்பீா் சிங் சீனியா் ஆண்டின் சிறந்த வீரா், வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது. ஹ... மேலும் பார்க்க

ஐஎஸ்எல் கால்பந்து தொடா்: பிளே ஆஃப் தேதிகள் அறிவிப்பு

இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 தொடரின் பிளே ஆஃப் சுற்று மாா்ச் 29 முதல் ஏப். 12 வரை நடைபெறவுள்ளது. நாட்டின் பிரபலமான கால்பந்து தொடரான ஐஎஸ்எல் லீகில் மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றுள்... மேலும் பார்க்க

இந்தியன் மகளிா் கால்பந்து லீக்: கோகுலம் கேரள எஃப்சி அபாரம்

இந்தியன் மகளிா் கால்பந்து லீக் (ஐடபிள்யுஎல்) தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஒடிஸா எஃப்சியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கோகுலம் கேரளா எஃப்சி. புவனேவுரத்தில் கலிங்கா மை... மேலும் பார்க்க

சிக்கந்தர் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என... மேலும் பார்க்க

சலார் - 2 ஒத்திவைப்பு?

சலார் - 2 படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கினார். இந்த... மேலும் பார்க்க