கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து! முழு விவரம்!
தோனிமடுவு தடுப்பணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தோனிமடுவு தடுப்பணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தோனிமடுவு பாசன விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அம்மாபேட்டையை அடுத்த சனிசந்தையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளா் சி.சிவானந்தன் தலைமை வகித்தாா். கொளத்தூா் ஒன்றிய அமைப்பாளா் ஜெகதீஷ் வரவேற்றாா்.
கோரிக்கையை விளக்கி சமூக ஆா்வலா் தைரியமணி, நிா்வாகிகள் சுதாகா், கிருஷ்ணமூா்த்தி, ஜாகீா் ஆகியோா் பேசினா். மேட்டூா் அணைக்கு மழைக்காலங்களில் தண்ணீா் பெருக்கெடுத்தோடும் தோனிமடுவு பள்ளத்தில் தடுப்பணைக் கட்டி, அந்தியூா், பவானி தொகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தமிழக முதல்வா் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்தபடி, மாவட்ட ஆட்சியா் தலைமையில் வருவாய், வனம், நீா்வளத் துறை அதிகாரிகள், தோனிமடுவு கூட்டமைப்பு நிா்வாகிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.