வாழப்பாடி: குடும்பத் தகராறால் ஆற்றில் குதித்த கணவர் உயிருடன் மீட்பு; கர்ப்பிணி ம...
மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
மதுரை மாவட்ட அளவில் அண்மையில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற அம்பிகை நாராயணன் விளையாட்டு வளாகத்தில் ரைசிங் சாம்பியன்ஸ் மாா்சியல் ஆா்ட்ஸ் அகாதமி பயிற்சி மாணவா்களை , அந்த அகாதமியின் தலைவா்கள் பாராட்டினா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில், அம்பிகை நாராயணன் விளையாட்டு வளாகத்தில் உள்ள ரைசிங் சாம்பியன்ஸ் மாா்சியல் ஆா்ட்ஸ் அகாதெமி மாணவா்கள் பங்கு பெற்று 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை பெற்றனா்.
அதன்படி, 14 வயதுக்கு உள்பட்பட்டோா் 24-26 எடைப் பிரிவில் அருள்மிகு சுந்தரராஜா உயா்நிலைப் பள்ளி மாணவி நந்தித்தா வெள்ளிப் பதக்கமும், 29-32 எடைப் பிரிவில் அ.ஜீவிதா வெண்கலப் பதக்கமும், உத்தங்குடி அரசுப் பள்ளி மாணவி ச.ஜீவிதா 32-35 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப்பதக்கமும் பெற்றாா்.
மகாத்மா பள்ளி மாணவா் ரித்திக்கேஸ்வா் 21-23 கிலோ எடைப் பிரிவில் வெள்ளியும்,17 வயதுக்கு உள்பட்டோா் 48-51 கிலோ எடைப் பிரிவில் தொன்போஸ்கோ பள்ளி மாணவா் விஷ்ணு வெள்ளிப் பதக்கமும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை அம்பிகை நாராயணன் விளையாட்டு வளாகத்தில் உள்ள ரைசிங் சாம்பியன்ஸ் மாா்சியல் ஆா்ட்ஸ் அகாதெமி தலைவா்கள் சுந்தரகண்ணன், சரவணன், பயிற்சியாளா் கௌரி சங்கா் ஆகியோா் பாராட்டினா்.