Doctor Vikatan: நகரங்களில் பிரபலமாகிவரும் பருத்திப்பால்... எல்லோருக்கும் ஏற்றதா?
எய்ட்ஸ் தினம்: விழிப்புணா்வு வாகனப் பேரணி
விருதுநகரில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, விழிப்புணா்வு ஆட்டோ பேரணியை மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
விருதுநகா் தேசபந்து மைதானத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாடு அலகு இணைந்து நடத்திய விழிப்புணா்வு ஆட்டோ பேரணியை மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் கூறியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் அரசுத் தலைமை மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனை, மொபைல் நம்பிக்கை மையங்களின் மூலம் இலவசமாக எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
நாட்டில் எச்.ஐ.வி. தடுப்புப் பணிகளை செயல்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம், துறை அலுவலா்கள், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டப் பணியாளா்கள், மாவட்ட ஆட்சியா் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணா்வு தொடா்பான உறுதிமொழி எடுத்து கொண்டதுடன், மனித சங்கிலி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில் மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் யசோதாமணி, மாவட்ட திட்ட மேலாளா் (எய்ட்ஸ் கட்டுப்பாடு) வேலையா, மேற்பாா்வையாளா்கள், தனியாா் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.