மாா்ச் 28-இல் தவெக பொதுக்குழு கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: திருவான்மியூா் ராமச்சந்திரா கலையரங்கத்தில் மாா்ச் 28-ஆம் தேதி காலை 9 மணிக்கு தவெக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினா்கள் அனைவரும் அழைப்புக் கடிதம் மற்றும் கட்சியின் அடையாள அட்டையுடன் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.