செய்திகள் :

`மிகவும் அழகாக இருக்கிறீர்கள்'- இத்தாலி பிரதமரிடம் சொன்ன ட்ரம்ப்; சமூக ஊடகங்களில் எழுந்த விவாதம்!

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசியல் பயணமாக இங்கிலாந்து சென்றிருந்தார். இத்தாலியில், பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கட்சியான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி ஏற்பாடு செய்த அட்ரேஜு என்ற வலதுசாரி அரசியல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, ``இத்தாலிப் பிரதமர் மெலோனியின் தலைமைத்துவத் திறன்கள் மற்றும் அரசியல் பலம் பாராட்டும் விதத்தில் இருக்கிறது. அவர் ஒரு அழகான பெண். நான் இதை அமெரிக்காவில் சொல்ல முடியாது.

அப்படிச் சொல்பவர்களின் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிடும். ஆனால், நான் என் வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக்கொள்பவன்" என்றார். ட்ரம்பின் இந்த உரைக்கு அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.

அதிபர் ட்ரம்ப் - இத்தாலி பிரதமர் மெலோனி
அதிபர் ட்ரம்ப் - இத்தாலி பிரதமர் மெலோனி

ஆனால் சமூக ஊடக பயனர்கள், அதிபர் ட்ரம்பின் வார்த்தைகளைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். குறிப்பாக அதிபர் ட்ரம்பின் பெண்கள் மீதான பிற்போக்குத்தனமான கருத்துகள் எனக் கடுமையாக சாடிவருகின்றனர்.

இத்தாலியின் அரசியல் களமும் - அமெரிக்க அரசியல் பண்பும் வெவ்வேறானவை என்பதை இந்த சம்பவம் விளக்குவதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இத்தாலியில் பொதுவாழ்வில் இருக்கும் ஒருவரைப் பாராட்டுவது அவரின் தனிப்பட்ட புகழுக்குரியது என்ற கருத்து நிலவுகிறது.

ஆனால், அமெரிக்காவில் பொதுவாழ்வில் இருக்கும் பெண் ஒருவரை வெளித் தோற்றத்தை வைத்துப் புகழ்வது பிற்போக்குத்தனமாக கருதப்படுகிறது.

இங்கிலாந்தில் அமெரிக்க அதிபர் ஆற்றிய இந்த உரை தற்போது இருநாட்டு சமூக ஊடகப் பயனர்களின் விவாதமாக மாறியிருக்கிறது.

காஸா போர் நிறுத்தம்: ட்ரம்ப் மட்டுமே உரிமைகோர முடியுமா? - இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா?

காஸாவுக்கான அமைதித் திட்டம் என ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தைவகுத்து அறிவித்தார். பெரும்பாலும் இஸ்ரேலுக்கேசாதகமாக இருந்த அந்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸும், இஸ்ரேலும்ஒப்புக் கொண்டன. காஸாவில் தாக்குதல் நின்றது. இ... மேலும் பார்க்க

SP Velumani வழக்கு: ADMK - DMK ரகசிய டீலிங்? | GAZA Deal: பேசுபொருளான Meloni | TVK | Imperfect Show

* காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது!* `நீங்கள் அழகான பெண்' - மெலோனி குறித்து ட்ரம்ப் சொன்னது என்ன?* `இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பீர்கள்தானே?' - ட்ரம்ப்* மீண்டும் ட்ரம்ப்பை நோபல் பரிச... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோவில் தக்கார் பதவி நீக்கம்! - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பின்னணி என்ன?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தக்காரை உடனடியாக பதவி நீக்கம் செய்து விட்டு புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.முருகக் கடவுளின் அறுபடை வீடு... மேலும் பார்க்க

"ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவில்லை" - அன்புமணி குற்றச்சாட்டு; அமைச்சர் மறுப்பு

ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடியில் முதலீடு செய்யவிருப்பதாகவும், இதன்மூலம் 14,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது.இது தொடர்பாக, தலைமைச... மேலும் பார்க்க