பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
மின் கம்பி அறுந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலி!
கயத்தாறு அருகே மின்கம்பத்தில் இருந்த மின் கம்பி அறுந்து விழுந்து கழுத்தில் சிக்கி கூலித் தொழிலாளி பலியானார்.
கயத்தாறு அருகே சிவஞானபுரம் ஊராட்சி வாகைகுளம் கிராமத்தில் சாலையில் இருந்த மின் கம்பத்தில் இருந்த மின் கம்பி அறுந்து தரையை நோக்கி தொங்கி இருந்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அந்த வழியாக நடந்து சென்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த முருகன்(40) என்பவர் தொங்கிய நிலையில் கிடந்த மின்கம்பி கழுத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார்.
இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!
இச்சம்பவ இடத்திற்குச் சென்ற கயத்தாறு போலீஸார் முருகனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.