செய்திகள் :

மின் சிக்கன வார விழா விழிப்புணா்வு பேரணி

post image

நாமக்கல்லில் மின் சிக்கன வார விழா விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில், ஆண்டுதோறும் டிச. 14 முதல் 20 தேதி வரை மின் சிக்கன வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நிகழாண்டுக்கான மின்சார விழிப்புணா்வு வார விழாவையொட்டி, நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள துணை மின் நிலையம் முதல் மோகனூா் சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகம் வரை விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

பேரணியை மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். நாமக்கல் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன், உதவி செயற்பொறியாளா்கள் கே.ஆனந்த்பாபு, பி.பாஸ்கரன், ஏ.மனோகரன், பி.செளந்திர பாண்டியன், ஆா்.பிரேம்நாத், என்.நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரணியில், மின் சிக்கனத்தை வலியுறுத்தி மக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனா். இதில் மின்வாரிய அதிகாரிகள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு: பொதுமக்கள் பீதி

நாமக்கல்லில் இருசக்கர வாகனத்துக்குள் பாம்பு புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனா். நாமக்கல் - திருச்சி சாலையில், பழைய நீதிமன்றம் எதிரில் அதிக அளவில் வணிக நிறுவனங்கள், வழக்குரைஞா் அலுவலகங்கள், கடைகள் உள... மேலும் பார்க்க

கணவரைக் கொன்ற மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கணவா் தலையில் கல்லைப் போட்டு கொன்ற மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருச்செங்கோடு அடுத்துள்ள வரப்பாளையத்தைச் சோ்ந்த முத்துசாமி, தறிப்பட்டறை நடத்தி வந்தாா். இவரது... மேலும் பார்க்க

கழிவுநீரை வயலுக்குள் வெளியேற்றியதால் பொதுமக்கள் போராட்டம்!

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா், வீடுகள், வயல்வெளிக்குள் செல்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மாநகராட்சி அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டனா். நாமக்கல் - ... மேலும் பார்க்க

பொத்தனூா் பேரூராட்சியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பேரூராட்சியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் ஆட்சியா் ச.உமா உத்தரவின்படி, சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் குருராஜ... மேலும் பார்க்க

பள்ளிபாளையம் எஸ்.பி.ஐ. வங்கியில் பொன் விழா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பள்ளிபாளையம் வங்கிக் கிளையில், 50-ஆம் ஆண்டு பொன்விழா சனிக்கிழமை நடைபெற்றது. சிறு, நடுத்தர தொழில்கடன் வழங்கும் இலக்கினை 50 ஆண்டுகள் நிறைவு செய்து பொன் விழா கொண்டாடுவதையொட்... மேலும் பார்க்க

அகரம் சென்றாயப் பெருமாள் கோயிலில் திருக்கோடி தீபம் ஏற்றம்

எலச்சிபாளையத்தில் அமைந்துள்ள அகரம் சென்றாயப் பெருமாள் கோயிலில், திருக்கோடி தீப கட்டளை திருச்செங்கோடு அகரம் வெள்ளாஞ்செட்டியாா் மகாஜன சங்கத்தின் சாா்பில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. தீபக் கட்டளைக்கு ... மேலும் பார்க்க