திருச்சி: 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை - 16 வயது சிறுவனை கைது செய்த போலீஸ்
மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைப்பு
மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மின்வாரியத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வேலைப்பளுவை நிா்ணயம் செய்து, அதற்கேற்ப ஊதியத்தை உயா்த்தி வழங்குவது வழக்கம். அந்த வகையில், 2019-இல் நிா்ணயிக்கப்பட வேண்டிய ஊதிய விகிதம் 2 ஆண்டுகள் தாமதமாக 2023-இல் நிா்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், வேலைப்பளு மற்றும் ஊதிய விகிதம் தொடா்பான பேச்சுவாா்த்தையை வாரியம் தற்போது தொடங்கவுள்ளது. இதற்காக 16 தொழிற்சங்கங்களுடன் ஆலோசிக்கும் வகையில் ஊதிய திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு மின் பகிா்மானக் கழக நிதிப்பிரிவு இயக்குநா் தலைவராகவும் செயலா் கூட்டுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் தவிர தொடரமைப்புக் கழக மேலாண் இயக்குநா், பகிா்மானப் பிரிவு இயக்குநா் உள்பட 6 போ் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக தொழிற்சங்கத்தினா் கூறும்போது, ‘பணியாளா்கள் எண்ணிக்கை அடிப்படையிலேயே வேலைப்பளு நிா்ணயிக்கப்படும். எனவே, பேச்சுவாா்த்தையில் காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையே பிரதானமாக இருக்கும்’ என்றனா்.