செய்திகள் :

`மீண்டும் திமுகவுக்கே வாய்ப்பு; விஜய் செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது!' - ஓபிஎஸ்

post image

சிவகங்கை மாவட்டம் காளையர் கோவிலில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குரு பூஜையில் கலந்துகொண்ட முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுத் தலைவருமான ஓ பன்னீர் செல்வம் மருது பாண்டியர் சிலைக்கு வெள்ளி கவசம் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் பன்னீர்செல்வம். அதிமுகவுடனான போராட்டம் பற்றி பேசியவர், "அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கின்ற குழுவாக நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் முக்கிய நோக்கமே, இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய போது, கழகம் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கழகத்தினுடைய சட்டவிதி தான் நடக்க வேண்டும் என்று சட்டவிதிகளை உருவாக்கினார்கள். பல்வேறு சட்டவிதிகள் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாக உருவாக்கினார்கள்.

Edappadi Palanisamy

கழகத்தினுடைய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கின்ற உரிமை கழகத்தினுடைய தொண்டர்களுக்குதான் இருக்க வேண்டும். கழகத்தினுடைய தொண்டர்கள் தேர்தல் மூலமாக பொதுச்செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதுதான் கழகத்தினுடைய சட்டவிதி. அந்த சட்டவிதியை புரட்சி தலைவருடைய உயிலில் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்.

இன்றைக்கு நிலைமை என்ன? கழகத்தினுடைய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கு 10 மாவட்ட கழகத்தினுடைய செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட கழக செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். ஐந்து வருடம் அவர் தலைமை கழகத்தினுடைய நிர்வாகியாக இருக்க வேண்டும் என்று உருமாற்றி இருக்கிறார்கள்.

கழகத்தினுடைய இந்த சட்டவிதியை உருவாக்குவதற்கு காரணம், புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களை திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து விளக்குவதற்கு திமுகவுடைய சில நூறு பொதுக்குழு உறுப்பினர்கள் தான் காரணம் என்ற நிலை இருந்தது. எதிர்காலத்தில் அனைத்து இந்திய அண்ணா முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தை புரட்சித்தலைவர் உருவாக்கியபோது, அவருக்கு ஏற்பட்ட நிலை பின் வருங்காலத்தில் எந்த தலைவருக்கும் இருக்கக்கூடாது, பொதுச்செயலாளர் அவர்களை தொண்டர்கள் தான் தேர்தல் தேர்தல் முறையாக தேர்வு செய்யப்படும் என்று அந்த விதியை உருவாக்கினார்கள்.

எம்.ஜி.ஆர்

மற்ற விதிகளெல்லாம் காலத்துக்கு தகுந்த மாதிரி திருத்தம் செய்யவோ அல்லது ரத்து செய்ய உரிமை உண்டு. ஆனால் இந்த ஒரு விதியை மட்டும் எந்த காலத்திலும் யாராலும் அது பொதுக்குழுவாக இருந்தாலும் சரி, மாவட்ட கழக செயலாளராக இருந்தாலும் சரி, திருத்தம் செய்யவோ ரத்து செய்யவோ கூடாது என்று எம்ஜிஆர் அவர்கள் தேர்தல் விதியை உருவாக்கி இருக்கிறார்கள்.

புரட்சித்தலைவருடைய இந்த எண்ணம், செயல்பாட்டுக்காக நாங்கள் இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தினுடைய வழிகாட்டுதல் என்னவென்றால், மீண்டும் இந்த ஆறு வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய சிவில் சூட்டில் விசாரிக்கப்பட வேண்டும். அங்கு வழங்கப்படுகின்ற தீர்ப்புதான் இறுதியானது. இதற்கு முன்னாள் எந்த தீர்ப்பு இந்த பிரச்சனை குறித்து வழங்கப்பட்டிருந்தாலும் அது செல்லாது என்றுதான் உச்சநீதிமன்றம் வழிகாட்டி இருக்கிறது. அதன்படிதான் இன்றைக்கு இந்த சிவில் சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அந்த சிவில் சுற்றில் எங்களுடைய நியாயத்தை புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிய ஒரு சொல்லப்பட்ட நியாயத்திற்காக நாங்கள் இன்றைக்கு சட்ட போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

விஜய்

விஜய் உடன் கூட்டணி இருக்குமா எனக் கேட்கப்பட்டபோது, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து கரூரில் பாதிக்கப்பட்டோருக்கு விஜய் ஆறுதல் கூற அவர்களை மாமல்லபுரத்துக்கு வரவைத்திருப்பது குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, "அந்த துயர சம்பவம் நடைபெற்று விட்டது. அங்கு சென்று ஆறுதல் சொன்னாலும் சரி, இங்கு கூட்டி வந்து சொன்னாலும் சரி. அனுதாபம் தெரிவித்ததைத்தான் நாம் பாராட்ட வேண்டுமே ஒழிய, அதற்கு உள்ளே நுழைந்து சில காரணங்களைச் சொல்லிக் கொண்டிருப்பது சரியாக இருக்காது. இப்போது செய்திருப்பதே உண்மையிலேயே பாராட்டக்கூடியது." என்றார்.

'விஜய் - அதிமுக கூட்டணி அமையாமல், அடுத்தமுறை திமுக ஆட்சிக்கு வந்தால் தவெக என்ற கட்சியே இருக்காது' என்ற அதிமுகவைச் சேர்ந்த உதயகுமார் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "நீங்க கடந்த காலங்களை அப்படியே புரட்டி பாத்தீங்கன்னா உதயகுமாருக்கு நான் எந்த காலத்திலும் பதில் சொல்லல. இந்த கட்சியை (அதிமுக) இந்த நிலைமைக்கு கொண்டு போய் சேர்த்ததுக்கு முக்கிய காரணம் அவருடைய சுயநலம் தான்" எனப் பதிலளித்தார்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வருமா என்ற கேள்விக்கு, "அதற்கான வாய்ப்பு இருப்பது கண்கூடாக தெரிகிறது. எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதனால் திமுகவுக்கு வாய்ப்பு இருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். நான் சொல்லவில்லை" என சிரித்தபடி பதிலளித்தார்.

`என்னை மன்னிச்சிருங்க; சூழல் சரியில்ல...' - கரூர் குடும்பத்தினரிடம் விஜய் உருக்கம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் ஆறுதல் கூறி வருகிறார். இந்தச் சந்திப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்ட... மேலும் பார்க்க

பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு தடை! – புதுச்சேரி தொழிலாளர் துறை உத்தரவு

புதுச்சேரி தொழிலாளர் துறையின் செயலர் ஸ்மித்தா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 66, துணைப் பிரிவுகள் (1) (b) விதிமுறையின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களின்படி, பு... மேலும் பார்க்க

"மாநாடு முடியற வரைக்கும் அந்தக் கட்சியின் தொண்டனாவே மாறிடுவேன்" - 'பந்தல்' சிவா பேட்டி

இன்னும் சில மாதங்களே இருக்கின்றன 2026 சட்டசபைத் தேர்தலுக்கு. தேர்தல் வந்தால் மாநாடு, பொதுக்கூட்டம், பிரசாரம் என அரசியல் கட்சிகள் பிசியாகி விடுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் கட்சிகளுடன் சேர்ந்து இன்னொரு மு... மேலும் பார்க்க

'15 ஆண்டுகளாக உங்கள் பின்னால் அணிவகுத்தோம்; எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா' - பரபரக்கும் போஸ்டர்

கடந்த செப்டம்பர் மாதம் 27 - ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களின் குடும்பத்தினரை இன்று சென்னை... மேலும் பார்க்க

"தவெக எனும் புதுக்கட்சியை திமுக வளர விடாது" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

"திமுகவுக்கு டெல்டா மாவட்ட மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எழுதி வைத்து கொள்ளுங்கள், தமிழகம் முழுதும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும... மேலும் பார்க்க