செய்திகள் :

மீண்டும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - ட்ரம்ப் பதில் என்ன?

post image

'நான் நிறுத்திய எட்டாவது போர் இது' - இப்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமை பீற்றிக்கொண்ட இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் மீண்டும் ஆரம்பிக்கிறது போலும்.

இஸ்ரேல் தாக்குதல்

நேற்று காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல். இதற்கு, 'ஹமாஸ் தான் முதலில் தாக்கியது' என்கிற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறது இஸ்ரேல்.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலை அந்த நாட்டின் அதிபர் நெதன்யாகு, 'ஹமாஸை எதிர்த்த சக்திவாய்ந்த தாக்குதல்' என்று குறிப்பிடுகிறார்.

இஸ்ரேல் தற்போதும் இந்தத் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்தத் தாக்குதலினால் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள்
இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள்

ட்ரம்ப் பதில்

இந்தத் தாக்குதல் குறித்து ஜப்பானில் ட்ரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "எனக்கு தெரிந்தவரை, இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்கியுள்ளது. தங்கள் மீதான தாக்குதலை எதிர்க்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது என்று நான் நினைக்கிறேன்" என்று கூலாக பதிலளித்திருக்கிறார்.

தற்போது பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவது போர் நிறுத்தத்தை மீறுவதே ஆகும். இந்தத் தாக்குதல்கள் போராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

Modi: "திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது" - பீகாரில் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) இந்தியா கூட்டணி கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக பீகார் மக்களை அவமானப்படுத்துவதாக பேசி உள்ளார்.பீகார் மாநிலம் சக்கரா பகுதியில் நடந்த பா... மேலும் பார்க்க

'விஜய்யின் விருப்பம்; திமுகவின் நெருக்கடி; அதிமுகவோடு கூட்டணியில்லை!' - உறுதியாக கூறும் அருண் ராஜ்!

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முக்கிய நிர்வாகிகள் ... மேலும் பார்க்க

`இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ... மேலும் பார்க்க

பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஶ்ரீதர் வாண்டையார்பார்வர்ட் பிளாக் கட்சி... மேலும் பார்க்க

வெற்றிகரமாக முடிந்த ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்... கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக ... மேலும் பார்க்க

SIR Row : `அதிமுக வரவேற்பதும், திமுக எதிர்ப்பதும் ஏன்?' - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் | களம் 1

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் அமைச்சர்கட்டுரையாளர்: முனைவர் வைகைச்... மேலும் பார்க்க