செய்திகள் :

மீண்டும் பீக்கி பிளைண்டர்ஸ்! புதிய இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்!

post image

பிரபல பீக்கி பிளைண்டர்ஸ் இணையத் தொடரின் புதிய பருவங்களின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஸ்டீவன் நைட் எழுதிய கதைகளின் அடிப்படையில் உருவான பீக்கி பிளைண்டர்ஸ் இணையத் தொடர்கள் உலக அளவில் மாபெரும் வெற்றியடைந்தன.

இந்த நிலையில், புதிய கதைகளத்துடன் மீண்டும் பீக்கி பிளைண்டர்ஸ் தொடர்கள் படம்பிடிக்கப்படுவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 1953 ஆம் ஆண்டு காலத்தில் நடைபெறும் கதைகளத்தில் உருவாகும் இந்தப் புதிய இணையத் தொடர் 2 பருவங்களாக (சீசன்) வெளியாகவுள்ளன.

இதில், ஒவ்வொரு பருவத்திலும் 6 எபிசோடுகள் வெளியாகும் எனவும், ஒவ்வொரு எபிசோடுகளும் 1 மணிநேரம் நீளமுடையதாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தப் புதிய தொடரில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, பீக்கி பிளைண்டர்ஸ் கதைகளின் அடிப்படையில் நடிகர் சிலியன் மர்ஃபி நாயகனாக நடிக்கும் திரைப்படம் ஒன்று உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டியின் புதிய படம்!

Filming for the new seasons of the popular Peaky Blinders TV series is expected to begin soon, it has been announced.

உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டியின் புதிய படம்!

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று (அக். 3) நடைபெற்றுள்ளது. ‘ராஜா கிளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், உமாபதி ராமையா. இந்த நிலையில், நடி... மேலும் பார்க்க

காந்தாரா படம் பார்க்கும்போது சாமியாடிய பெண்..! வைரல் விடியோ!

கார்நாடகத்தில் திரையரங்கு ஒன்றில் காந்தாரா படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் சாமியாடிய விடியோ வைரலாகி வருகிறது. நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் ... மேலும் பார்க்க

கேரளத்தில் முதல்முறை... வரலாறு படைத்த லோகா!

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லோகா திரைப்படம் கேரளத்தில் புதிய வரலாறு படைத்துள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கிய லோகா சேப்டர்: சந்திரா திரைப்படம் கடந்த ஆக.28ஆம் தேதி வெளியானது. உலக... மேலும் பார்க்க

வாழ்க்கை - வேலை சமநிலைப்படுத்த திணறுகிறீர்களா? இதோ டின்டிம் பென்குயின் பற்றிய கதை!

வாழ்க்கை - வேலையை சமநிலைப்படுத்த திணறி வரும் மனிதர்களுக்கு இடையே, வலசை செல்லாமல் தன்னைக் காப்பாற்றிய மீனவரைக் காண ஆண்டுதோறும் வந்துகொண்டிருந்த டின்டிம் என்ற பென்குயின் உலகளவில் புகழ்பெற்றது.உலகிலேயே வ... மேலும் பார்க்க

உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற மணிப்பூர் வீராங்கனை!

உலக சாம்பியன்ஷிப் பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு (31 வயது) வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் இத்துடன் இவர் மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கத... மேலும் பார்க்க