செய்திகள் :

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம்: இன்று எவ்வளவு உயர்ந்தது?

post image

தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு வியாழக்கிழமை (டிச. 26) பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.57,000-க்கு விற்பனையாகிறது.

டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கிறிஸ்துமஸ் நாளான புதன்கிழமை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,100-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை(டிச.26) அதிரடியாக கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,125-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 57,000-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிக்க:என்எல்சி நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு என பண்டிகை காலங்கள் என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயருமே தவிர குறைய வாய்ப்பில்லை.

வெள்ளி விலை அதிரடி உயர்வு

இதேபோன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.100-க்கும், கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உச்சம் தொட்ட ஸ்மாா்ட்போன் ஏற்றுமதி

கடந்த நவம்பரில் இந்திய அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) ஏற்றுமதி இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது குறித்து துறை புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: நாட்டின் அறிதிறன் பேசி ஏற்றுமதி கடந்த ந... மேலும் பார்க்க

இதுவரை இல்லாத சரிவில் ரூபாய் மதிப்பு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3வது நாளாகத் தொடர்ந்து சரிந்து, கடும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு மூன்றாவது நாளாக 12 காசுகள் சரிந்து ரூ. 85.27 காசுகளாக நிர்ணயிக... மேலும் பார்க்க

மாற்றமின்றி முடிந்த பங்குச் சந்தை! ஆட்டோ, மீடியா பங்குகள் உயர்வு!

முதலீட்டாளர்களிடையே நிலவிய நிலையற்ற தன்மையால் பங்குச் சந்தை பெரிய மாற்றங்களின்றி நிறைவு பெற்றது. சென்செக்ஸ் 0.39 புள்ளிகள் சரிந்து 78,472 புள்ளிகளுடனும் நிப்ஃடி 22 புள்ளிகள் உயர்ந்து 23,750 புள்ளிகளுட... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 புதன்கிழமை அதிகரித்துள்ளது.கடந்த வார நாள்களில் ரூ. 57,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, வார முடிவில் ரூ. 56,800-க்கு விற்பனை செய்யப்... மேலும் பார்க்க

38 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ

கடந்த அக்டோபரில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 37.6 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்களை இழந்துள்ளது. இருந்தாலும், சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கையில் அந்த நிறுவனம் தொடா்ந்து முதலிடம் வகிக்கிறத... மேலும் பார்க்க

ஃபெனிக்ஸிஸ் நிறுவனத்தை வாங்கும் ஆரியன்ப்ரோ சொலுயூசன்ஸ்!

புதுதில்லி: ஆரியன்ப்ரோ சொல்யூஷன்ஸ் இன்று பாரிஸை தளமாகக் கொண்ட கன்சல்டன்சி நிறுவனமான ஃபெனிக்சிஸ் நிறுவனத்தை 10 மில்லியன் யூரோக்கள் (ரூ.90 கோடி) ரொக்க ஒப்பந்தத்தில் வாங்கியதாக தெரிவித்துள்ளது.ஃபெனிக்ஸிஸ... மேலும் பார்க்க