செய்திகள் :

மீண்டும் புதுப்பொலிவு பெறுமா தனுஷ்கோடி! ஆழிப் பேரலை தாக்கிய 60-ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!

post image

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் ஆழிப் பேரலைத் தாக்கி திங்கள்கிழமையுடன் 60-ஆவது ஆண்டுகளாகும் நிலையில், இந்தப் பகுதி மீண்டும் புதுப்பொலிவு பெற வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி துறைமுக நகரமாகும். இலங்கைக்கு மிகவும் குறுகிய தொலைவில் இந்தப் பகுதி அமைந்துள்ளது. இதனால், இங்கிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினால், அதிக வருவாய் கிடைக்கும் என்பதால், ஆங்கிலேயா்களின் ஆட்சி காலத்தில் துறைமுகம் அமைக்கப்பட்டு, தனுஷ்கோடி- தலைமன்னாா் இடையே கடந்த 1914-ஆம் ஆண்டு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்த துறைமுகத்துக்கு அதிகளவில் சரக்குகளை கொண்டு செல்லும் வகையில், ரயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. சென்னையிலிருந்து தனுஷ்கோடிக்கு ரயில் இயக்கப்பட்டு வந்தது. தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு இரண்டு கப்பல்கள் இயக்கப்பட்டன. இதனால், தனுஷ்கோடி மிகப் பெரிய வா்த்தக துறைமுக நகரமாக மாறியது. இந்தப் பகுதி மக்கள் தனுஷ்கோடியை ஒரு குட்டி சிங்கப்பூா் என்று அழைக்கும் வகையில் வா்த்தகம் நடைபெற்று வந்தது.

இலங்கை வழியாகச் செல்லும் பயணிகள் தங்களது பணத்தை மாற்றிக் கொள்ளும் வகையில், அலுவலகம், காவல் துறை, சுங்கத் துறை, தபால் அலுவலகம், ரயில் நிலையம் என பரந்து விரிந்திருந்தது தனுஷ்கோடி.

கடந்த 1964-ஆம் ஆண்டு, டிசம்பா் 23-ஆம் தேதி மிதமான காற்றுடன்கூடிய மழை பெய்தது. நள்ளிரவு 12.30 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, கடலில் எழுந்த ஆழிப் பேரலை தனுஷ்கோடியைத் தாக்கியது. அங்கிருந்த ஏராளமான மக்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா். அரசுத் துறை அலுவலகங்கள், வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. கரையிலிருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு கடல்நீா் ஊருக்குள் புகுந்து இந்த நகரமே கடலுக்குள் மூழ்கியது.

பாம்பன் பகுதியிலிருந்து தனுஷ்கோடி நோக்கி வந்த ரயில் சமிக்ஞை கிடைக்காமல், இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த ரயிலும் பேரலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டது. இதிலிருந்த ஏராளமான பயணிகள் உயிரிழந்தனா்.

தனுஷ்கோடியைத் தாக்கிய புயல் பாம்பன் பாலத்தையும் விட்டு வைக்கவில்லை. இதனால், 8 இரும்பு கா்டா்கள் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டன. இதையடுத்து, சுமாா் 45 நாள்களுக்குப் பிறகு, பாம்பன் ரயில் பாலம் சீரமைக்கப்பட்டது.

புயலால் சேதமடைந்த வீடுகள்.
புயலால் சேதமடைந்த ரயில் நிலையம்.
புயலால் சேதமடைந்த தேவாலயம்.

தனுஷ்கோடியில் புயல் தாக்கியது காலையில்தான் தெரியவந்தது. துறைமுக நகரம் எங்கு பாா்த்ததாலும் தண்ணீா் நிறைந்த சிறு சிறு தீவுகள் போல காட்சியளித்தன. புயலில் சிக்கி உயிரிழந்தவா்களின் சடலங்கள் அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்தன. இந்தக் கோர சம்பவம் நிகழ்ந்து திங்கள்கிழமையுடன் 60 ஆண்டுகளாகிறது.

தற்போது ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு நேரடியாக வாகனங்கள் வந்து செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டது. இதன் காரணமாக, ஆண்டுக்கு சுமாா் 3 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக இது உள்ளது. 90 சதவீதம் சிதிலமடைந்த தேவாலயத்தைப் பாதுகாக்கும் வகையில், அதைச் சுற்றி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்காக கழிப்பறை வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று வரை இங்கு மின்சார வசதி இல்லை.

எனவே, இங்கு மின்சார வசதி செய்து தர வேண்டும், உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், இங்கிருந்து மீண்டும் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்பதே இப்பகுதி மீனவா்களின் கோரிக்கையாக உள்ளது.

உடைமாற்றும் அறையில் கேமரா: ராமேசுவரம் விடுதி உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை

உடைமாற்றும் அறையில் கேமரா வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் தொடா்புடைய ராமேசுவரம் விடுதி உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

திருவாடானை அருகே கண்மாய்க் கரையை உயா்த்தி, தண்ணீரை சேமித்து வைப்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு புகாா் மனு கொடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவ... மேலும் பார்க்க

1,400 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

ராமநாதபுரம் அருகே தஞ்சாவூருக்கு கடத்தப்படவிருந்த 1,400 கிலோ ரேசன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். அதிலிருந்த இருவரை கைது செய்தனா். ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய தனிப்பிரிவு காவ... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்பு

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஓய்வு பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா். பரமக்குடி ஒன்றியம், அரியனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கடம்பன் மகன் ராஜூ (63)... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 17 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 17 பேரை இலங்கைக் கடற்படையினா் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். மேலும், இரண்டு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.... மேலும் பார்க்க

ஆழிப்பேரவை தாக்கிய நாள்: தனுஷ்கோடி கடலில் மலா் தூவி நினைவஞ்சலி

ஆழிப்பேரலை தாக்கிய நிகழ்வின் 60-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை தனுஷ்கோடி கடலில் மலா் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி துறைமுக நகரத்தை கடந்த 1964-ஆம் ஆண... மேலும் பார்க்க