செய்திகள் :

மீண்டும் 80 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: கலக்கத்தில் மக்கள்!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 80 ஆயிரத்தைக் கடந்த நிலையில் மக்கள் அதிர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உச்சம் தொட்ட தங்கம் விலை

வாரத்தின் முதல் நாளான இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது தங்கம் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760-க்கும் விற்பனையானது.

ஆனால், வர்த்தகம் நிறைவுபெற உள்ள நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் 90 உயர்ந்து ரூ.10,060-க்கும், ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.80,480-க்கு விற்கப்படுகிறது. இன்று காலை குறைந்திருந்த தங்கம் விலை, திடீரென மீண்டும் உயர்ந்துள்ளது.

போட்டிப்போடும் வெள்ளி

தங்கத்தோடு போட்டிப்போட்டுக் கொண்டு வெள்ளி விலையும் உயர்ந்து வருகின்றது. இன்று காலை ஒரு கிராம் ரூ.137-க்கு விற்பனையானது. பிற்பகலுக்கு மேல் ரூ. 3 உயர்ந்து ரூ.140-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,40,000-க்கும் விற்கப்படுகிறது.

ஏன் அதிகரிப்பு?

இந்தியா-அமெரிக்கா இடையே வரி உயர்வு உள்ளிட்ட சில காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலையும் உயர்ந்து வருவதாகத் தங்க மதிப்பீட்டாளர்கள் கூறியுள்ளனர். இனிவரும் நாள்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவது, திருமண வயதில் பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

People are shocked as the price of gold jewelry in Chennai has once again crossed 80 thousand.

3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பேசியிருக்கிறார்.கரோனாவுக்குப் பிந்தைய இந்தியாவின் பொருளாதார மீள்ச்சி குறித்தும் இந்தியாவில் விலைவாச... மேலும் பார்க்க