செய்திகள் :

முதல்வராகிறாரா சிவக்குமார்? கர்நாடக அமைச்சர், எம்எல்ஏக்கள் பேச்சால் சர்ச்சை!

post image

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கர்நாடக காங்கிரஸில் உள்கட்சி பூசல் நிலவி வரும் சூழலில் அமைச்சரின் பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற போதே, சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆகியோரில் யார் முதல்வர் என்ற கேள்வி நிலவியது.

தலைமையின் பேச்சுவார்த்தையை சிவக்குமார் ஏற்றுக்கொண்ட நிலையில், முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக சிவக்குமாரும் பொறுப்பேற்றனர்.

இந்த நிலையில், முடா வழக்கில் சித்தராமையாவை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்ததால், அடுத்த முதல்வர் சிவக்குமார் என்ற பேச்சு மீண்டும் எழுந்தது.

இதனிடையே, கர்நாடகத்தின் முதல்வராக வருகின்ற டிசம்பருக்குள் சிவக்குமார் பொறுப்பேற்பார் என்று காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜு வி சிவகங்கா ஞாயிற்றுக்கிழமை காலை தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க : 78 ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பன் மறைவிட கிராமத்துக்கு மின்சாரம்!

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் சிறிது நேரத்தில் அமைச்சர் வீரப்ப மொய்லி வெளியிட்ட கருத்துகள் கர்நாடக அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

”டி.கே. சிவக்குமார் நல்ல தலைமையை வழங்கியுள்ளார், கட்சியைக் கட்டமைத்துள்ளார். அவர் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது, அது காலத்தின் கட்டாயம். முதல்வர் பதவி என்பது பரிசாக வழங்கப்படுவது அல்ல, அவரின் கடின உழைப்புக்கு கிடைத்தது” எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மற்றும் பேரவை உறுப்பினரின் கருத்துகளால் கர்நாடக காங்கிரஸுக்குள் சித்தராமையா மற்றும் சிவக்குமாரின் ஆதரவாளர்களுக்கு இடையே வார்த்தை மோதலை ஏற்படுத்தியுள்ளது.

1,090 கோடி டாலராகச் சரிந்த அந்நிய நேரடி முதலீடு

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 1,090 கோடி டாலராகச் சரிந்துள்ளது. இது குறித்து தொழில் மற்ற... மேலும் பார்க்க

சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை: உச்சநீதிமன்றம்

புது தில்லி: சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது. ‘அத்தகைய நடைமுறை அந்தப் பதிவை தணிக்கை செயவதாக இருக்கக் கூடாது’ என்றும் உச்... மேலும் பார்க்க

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தகவல்

புது தில்லி: ‘அபுதாபியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு ஏற்கெனவே தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது’ என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. அப்போத... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான கோதுமை உள்ளது: உணவுச் செயலா்

பனாஜி: பொது விநியோகத் திட்டத்தின்கீழ் (பிடிஎஸ்) மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு விநியோகிக்க போதுமான அளவுக்கு கோதுமை கையிருப்பில் உள்ளதாக மத்திய உணவுச் செயலா் சஞ்சீவ் சோப்ரா திங்கள்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22% அதிகரிப்பு

புது தில்லி: கடந்த 5 ஆண்டுகளில் வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான கடன்கள் இடைநிலை நகரங்கள், கிராமப் பகுதிகளில் உள்ள பெண்களால் வாங்கப்பட்டுள... மேலும் பார்க்க

தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!

ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலை... மேலும் பார்க்க