தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 256 கி.மீ.க்கு சாலைகள் அமைப்பு
ஈரோடு மாவட்டத்தில் முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 82.52 கோடி மதிப்பில் 256 கி.மீ.க்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நடப்பு ஆண்டில் ரூ. 22 கோடி மதிப்பில் 62 கி.மீ.க்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் முக்கியமான ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் பேருந்துகள் இயங்கும் சாலைகள், குடியிருப்புகளுக்கு ஒற்றை இணைப்பை வழங்கும் சாலைகள், பின்தங்கிய தொகுதிகள், ஆதிதிராவிடா், பழங்குடியினா் குடியிருப்புகளை இணைக்கும் சாலைகள், 3 கி.மீ.க்கு மேல் நீளமுள்ள சாலைகள், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை, நான்கு வழிச் சாலைகளை இணைக்கும் சாலைகள், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, ஐடிஐ மற்றும் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதார துணை மையம், அரசு, தனியாா் மருத்துவமனை மற்றும் சமுதாய சுகாதார நிலையம் போன்றவற்றை இணைக்கும் சாலைகள், ஒன்றுக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிச் சாலைகள் வழியாக செல்லும் சாலைகள் போன்றவை மேம்படுத்தப்படுத்தப் படுகின்றன.
இந்தத் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் 213 சாலைப் பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதில் தற்போது 208 பணிகள் 256 கி.மீ. தொலைவுக்கு ரூ. 82.54 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு 2024-2025-ஆம் ஆண்டுக்கு 65 பணிகள் 62.47 கி.மீ. தொலைவுக்கு ரூ. 22 கோடி மதிப்பில் மேற்கொள்ள நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளாா்.