முதல்வர் பிறந்தநாள்: தமிழில் கையெழுத்திட்டு ஆளுநர் வாழ்த்துக் கடிதம்!
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் கையொப்பமிட்டு பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 1) தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இதையும் படிக்க | முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை!
தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் கையொப்பமிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
"தாங்கள் இன்று தங்களுடைய 72-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின்கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மேலும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்நாளில் தங்களை வாழ்த்துகிறேன்" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் ஆர்.என். ரவி அந்த வாழ்த்து கடிதத்தில் தமிழில் கையொப்பமிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பெரியார் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!