இந்த வாரம் மட்டும் தங்கம் விலை 2% உயர்வு; நேற்று சர்வதேச சந்தையில் தங்கம் உச்சம்...
முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் விசிட்: கருப்புக் கொடி காட்ட முயன்றவர் கைது - என்ன நடந்தது?
நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யவும் இராமநாதபுரத்திற்கு வருகை தந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்த முதலமைச்சரை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் உள்ளிட்டவர்களும், மக்கள் பிரதிநிதிகளும், கட்சியினரும் வரவேற்றனர்.
தொண்டர்களின் உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக இராமநாதபுரம் கிளம்பிய முதலமைச்சர், செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்பு அங்கிருந்து கிளம்பிய முதலமைச்சரை இராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆகியோர் ஏற்பாட்டில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் இராமநாதபுரம் சென்றார்.
இதற்கிடையே முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ள இராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு `ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி'யின் பெயரை சூட்டக் கோரிக்கை வைத்தும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்காததால் முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவித்திருந்த தென்தமிழர் கட்சி நிர்வாகி பால முரளியை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் முதல்வர் `கலைஞர் கருணாநிதி' பெயர் சூட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தைத் திறந்து வைப்பதோடு இராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் முதலமைச்சர் கலந்துகொள்கிறார்.