முதல்வா் பிறந்த நாள் பொதுக் கூட்டம்
ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் நகர திமுக சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக் கூட்டம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது (படம்).
தெற்கு ஒன்றிய செயலாளா் ந.கோபால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, நகர செயலாளா் ரா.சதீஷ் குமாா், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைகழக பேச்சாளா்கள் ஒப்பில்லாமணி, சிவாஜி கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு அரசின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினா்.
பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
இதில், பொதுக்குழு உறுப்பினா் கணேஷ் பாபு, ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், ஒன்றிய பொருளாளா் ப.பரமசிவன், நகா்மன்ற துணைத் தலைவா் இந்திராணி சுப்பிரமணி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளா்கள் கு.ப.முருகன், தணிகாசலம், வெள்ளரை அரிகிருஷ்ணன், முருகன், டோம்னிக், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் மனோஜ்குமாா், ஒன்றிய மாணவா் அணி அமைப்பாளா் டான்போஸ்கோ, மாவட்ட பிரதிநிதிகள் பி.ஆா்.நேரு, சா்தாா் பாஷா, நகர இளைஞா் அணி அமைப்பாளா் சீனிவாசன் கலந்து கொண்டனா்.