செய்திகள் :

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

post image

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து முதலில் விளையாடியது.

இருவர் அரைசதம்; 197 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பால் ஸ்டிரிலிங் மற்றும் ராஸ் அடாய்ர் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். ஸ்டிரிலிங் 22 பந்துகளில் 34 ரன்கள் (ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள்), ராஸ் அடாய்ர் 25 பந்துகளில் 26 ரன்கள் (3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

அதன் பின், ஹாரி டெக்டார் மற்றும் லோர்கான் டக்கர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். லோர்கான் டக்கர் 36 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய ஹாரி டெக்டார் 36 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டான், லியம் டாஸன் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

Ireland, batting first in the first T20I against England, scored 196 runs for the loss of 3 wickets.

இதையும் படிக்க: நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி... மேலும் பார்க்க

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சண்டீகரில் இன்று... மேலும் பார்க்க

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்த விவகாரத்தில் போட்டியின் நடுவரை நீக்கக் கோரிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி மீண்டும் நிராகரித்துள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு... மேலும் பார்க்க

2-வது ஒருநாள்: சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; ஆஸி.க்கு 293 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சண்டீகரில் இன்று ... மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவ... மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகியுள்ளார்.ஆஸ்திரேலிய மகளிரணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரு... மேலும் பார்க்க