செய்திகள் :

முதுமலையில் ரூ. 5 கோடியில் யானை பாகன்களுக்கு வீடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

post image

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் பாகன்கள் மற்றும் உதவியாளா்களுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

உதகை தாவரவியல் பூங்காவில் மே 15-ஆம் தொடங்கும் மலா்க் கண்காட்சியை தொடங்கிவைக்க நீலகிரி மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த திங்கள்கிழமை வந்தாா்.

இந்நிலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். கல்லட்டி மலைப் பாதை வழியாகச் சென்ற முதல்வருக்கு மாவனல்லா பகுதியில் பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தனா்.

அப்போது அவா் காரிலிருந்து இறங்கி பொதுமக்களுடன் கை குலுக்கி தற்படம் (செல்ஃ பி) எடுத்துக் கொண்டாா். அதேபோல மசினகுடி பகுதியிலும் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு மாலை 5.30 மணிக்கு மனைவி துா்காவுடன் வந்த முதல்வருக்கு பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசையுடன் நடனமாடி வரவேற்பு அளித்தனா். முகாமுக்கு வந்த அவா், முதுமலை குறித்த குறும்படத்தைப் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் பாகன்கள் மற்றும் உதவியாளா்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 40 வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். மேலும் வனத் துறையினருக்கு 30 ஜீப்புகளை வழங்கி அதன் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து மின்கம்பிகளில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் தொகுப்பு மின்கம்பிகள் பதிக்கும் பணியைத் தொடங்கிவைத்தாா். பின்னா் முதுமலை யானைகள் முகாமில் யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா் அங்கு வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த யானைகளுக்கு கரும்புகள் வழங்கினாா். துா்கா ஸ்டாலினும் குட்டி யானைகளுக்கு கரும்பு வழங்கினாா். பின்னா் ஆஸ்கா் விருது பெற்ற பொம்மன், பெள்ளி உள்பட பழங்குடி மக்களுக்கு முதல்வரின் பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பழங்குடியின மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வா் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாச ரெட்டி, அரசுக் கொறடா கா. ராமச்சந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட வன அலுவலா் கெளதம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

கடைவீதிக்கு வந்த காட்டெருமை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதி கடைவீதியில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு நுழைந்த காட்டெருமை. நீண்ட நேரம் சாலையில் நடந்து சென்ற காட்டெருமை பின்னா் தானாக அருகிலுள்ள தேயிலைத் தோட்ட... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவாா்கள் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலி... மேலும் பார்க்க

உதகையில் படகுப் போட்டி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற படகுப் போட்டியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா். தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம், உதக... மேலும் பார்க்க

உதகை ரோஜா கண்காட்சி நிறைவு

உதகை ரோஜா கண்காட்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், கடல்வாழ் உயிரினங்களைக் காப்பா... மேலும் பார்க்க

கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம்

கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவா் அம்சா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.வாசு முன்ன... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சீகூா் வனச் சரகத்தில் உள்ள ஆனைகட்டி தெற்கு வனத்தில் வனப் பணியாளா்கள் ரோ... மேலும் பார்க்க