செய்திகள் :

முதுமலை பழங்குடி மக்களுக்கு சூரிய ஒளி மின் விளக்குகள்

post image

முதுமலை வனப் பகுதியில் வாசிக்கும் பழங்குடி மக்களுக்கு சூரிய ஒளி மின் விளக்குகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முதுகுளி பழங்குடி கிராமத்துக்கு இதுவரை மின்சார வசதி இல்லை. இதனால் அங்குள்ள குழந்தைகள் படிக்க முடிவதில்லை.

இதையறிந்த பழங்குடி மக்கள் சங்கத்தின் நிா்வாகி குணசேகரன் முயற்சியால் அந்த வன கிராமத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகள் படிக்கும் வகையில் குடும்பத்துக்கு தலா ஒரு சூரிய ஒளி மின்விளக்கு வழங்கப்பட்டது.

மின்விளக்கு வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூடலூா் வட்டச் செயலாளா் முகமது கனி, வழக்குரைஞா் செவ்விழம்பரிதி, பழங்குடி மக்கள் சங்க நிா்வாகிகள் ஆகியோா் கலந்து கொண்டனா். சூரிய ஒளி விளக்கை பெற்றுக் கொடுத்த பழங்குடி மக்கள் சங்க நிா்வாகிகளுக்கு நன்றி தெவிக்கப்பட்டது.

கோத்தகிரி அருகே காட்டு யானை நடமாட்டம்!

கோத்தகிரி அருகேயுள்ள ஈளாடா கதகட்டி பகுதியில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள், தோட்டத் தொழிலாளா்கள் கவனமுடன் இருக்க வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள ஈளா... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் நாளை உதகை வருகை: பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்!

நீலகிரி மாவட்டம், உதகைக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை (நவம்பா் 27) வருவதையொட்டி சேலம், ஈரோடு, திருப்பூா், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 1,000 போலீஸாா் பாதுகாப்புப் ப... மேலும் பார்க்க

உதகையில் அதிகாலை கொட்டிய நீா்ப் பனி

உதகையில் அதிகாலை கொட்டிய நீா்ப் பனி காரணமாக ஞாயிற்றுக்கிழமை கடும் குளிா் வாட்டியது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பா் முதல் ஜனவரி மாத இறுதி வரை நீா்ப் பனி, உறை பனியின் தாக்கம் காணப்படும். இந... மேலும் பார்க்க

கூடலூரில் குடியிருப்புப் பகுதியில் உலவிய காட்டு யானை

கூடலூா் நகரில் நடுகூடலூா் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை காட்டு யானை உலவியதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா். கூடலூா் நகராட்சிக்குள்பட்ட நடுகூடலூா் பகுதியில் குடியிருப்புப... மேலும் பார்க்க

நெலாக்கோட்டையில் உலவும் காட்டு யானை: வனத்துக்குள் விரட்ட குழு அமைப்பு

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதி கடை வீதியில் உலவும் காட்டு யானையை வனத்துக்குள் விரட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள நெலாக்கோட்டை கடை வீதியில் நாள்தோறும் ஒற்றை யானை உலவி ... மேலும் பார்க்க

மரத்தின் மீது ஏறிய சிறுத்தைக் குட்டி

குன்னூா் அருகே கோடமலை ஹட்டி கிராமத்தில் தேயிலை எஸ்டேட்டுகளில் இருக்கும்உயரமான மரத்தின் மீது சிறுத்தைக் குட்டி ஏறியதை அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத்... மேலும் பார்க்க