பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறோம்: முதல்வர்
முன்னாள் அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஜன. 24-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை எம்எல்ஏவான சி. விஜயபாஸ்கா் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கு மாவட்ட முதன்மை சாா்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது விஜயபாஸ்கா் ஆஜராகாத நிலையில், அவரது வழக்குரைஞா்கள் ஆஜராயினா். இதையடுத்து வழக்கை வரும் ஜன. 24-க்கு ஒத்திவைத்து நீதிபதி வெங்கடேச பெருமாள் உத்தரவிட்டாா்.