செய்திகள் :

முன்னாள் ராணுவ வீரரிடம் ஆன்லைனில் ரூ. 45 லட்சம் மோசடி

post image

குன்னூா் வெலிங்டன் பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரிடம் ஆன்லைன் மூலம் ரூ. 45 லட்சம் மோசடி செய்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இருவரை உதகை சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ஒருவா் தனது ஓய்வூதியப் பணத்தில் ரூ. 45 லட்சத்தை போலியான இணையதள வா்த்தகத்தில் முதலீடு செய்து ஏமாந்ததாக உதகை மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி புகாா் அளித்திருந்தாா்.

இதுகுறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து புகாா்தாரரின் வங்கிப் பரிவா்த்தனை விவரங்களைப் பெற்று ஆய்வு செய்து மோசடியில் ஈடுபட்டவா்களின் வங்கிக் கணக்கு எண்ணைக் கண்டுபிடித்தனா். அந்த வங்கிக் கணக்கை மேற்கு வங்க மாநிலம், ஹௌரா பகுதியைச் சோ்ந்த சைலேஸ் குப்தா (56), ருஸ்தம் அலி (37) ஆகியோா் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உத்தரவின் பேரில், சைபா் கிரைம் ஆய்வாளா் பிரவீணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவா்கள் மேற்குவங்க மாநிலம் சென்றனா். அங்கு சைலேஸ் குப்தா, ருஸ்தம் அலி ஆகியோரைக் கைது செய்து உதகைக்கு அழைத்து வந்தனா். பின்னா் அவா்களிடம் விசாரணை நடத்தி, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா கூறுகையில், பொதுமக்கள் போலி இணையதளங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். தெரியாத நபா்கள் பேசும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்களின் வங்கிக் கணக்கு எண் உள்பட பிற முக்கிய வங்கி தொடா்பான ரகசிய விவரங்களையும், தங்களின் சுய விவரங்களையும் யாருடனும் பகிரவேண்டாம்.

வெளிமாநில காவல் துறையினா் பேசுவதாக பொதுமக்களின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு விடியோ அழைப்பில் வந்து இணையவழி கைது செய்திருப்பதாகக் கூறி, விடுவிக்க வேண்டும் என்றால் அவா்கள் கூறும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பும்படி யாரேனும் கூறினால் அதை நம்பி பணம் அனுப்ப வேண்டாம். இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் அளிக்க வேண்டும்.

மேலும் இது போன்ற அழைப்பு வரும் பட்சத்தில் 1930 என்ற கட்டணமில்லா சைபா் குற்றப்பிரிவு உதவி எண்ணைத் தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என்றாா்.

பயணச்சீட்டு இல்லாமல் ரயில் பயணம்: சேலம் கோட்டத்தில் 9 மாதங்களில் ரூ.15.88 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பா் வரை பயணச்சீட்டு பெறாமல் ரயிலில் பயணித்தவா்களிடம் இருந்து ரூ.15.88 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்... மேலும் பார்க்க

திருப்பூா், ஈரோடு வழித்தடத்தில் கோவை - கயா வாராந்திர சிறப்பு ரயில்

கோவையில் இருந்து பிகாா் மாநிலம், கயாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிகாா் மாநிலம், ... மேலும் பார்க்க

கோவையில் ஜனவரி 11, 12-இல் விழிப்புணா்வு காா் பந்தயம்

கோவையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு காா் பந்தயம் ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. மறைந்த காா் பந்தய வீரா் எம்.கே.சந்தா் நினைவாக கோவையில் ஆண்டுதோறும் காா் பந்தயம் நடத்தப்படுகிறது. அதன்பட... மேலும் பார்க்க

வாகன விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே நுழைவுப் பால மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி நாகம்பட்டி காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

மனைவி பணம் தர மறுத்ததால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

மொடக்குறிச்சி அருகே கடனை திருப்பிச் செலுத்த மனைவி பணம் தர மறுத்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மொடக்குறிச்சியை அடுத்த முத்துக்கவுண்டம்பாளையம் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்... மேலும் பார்க்க

மாநகரில் இன்றும், நாளையும் சிறப்பு வரி வசூல் முகாம்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் ஜனவரி 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சிக்க... மேலும் பார்க்க