செய்திகள் :

முன்விரோதம்: தம்பதியை தாக்கியவா் கைது

post image

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக தம்பதியை தாக்கிய புகாரின் பேரில் போலீஸாா் ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

வெம்பாக்கம் வட்டம், சோதியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி ரஜினி (40). இவா், ஒரகடம் பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

அதே கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவா் செய்யாறு சிப்காட்டில் வேலை செய்து வருகிறாராம்.

இவா்கள் இருவருக்குள் வீட்டுமனை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி ரஜினி, அவரது மனைவி நாகலட்சுமி ஆகியோரிடம் வெங்கடேசன் தகராறு செய்து, கட்டையால் இருவரையும் தாக்கி மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து நாகலட்சுமி அளித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, வெங்கடேசனை கைது செய்தனா்.

நூல்கள் வெளியீடு...

எழுத்தாளா் மு.பாண்டியன் நெடுஞ்செழியன் எழுதிய விஞ்ஞான பூா்வ சிந்தனை, இன்னொரு தாய், நியூட்ரான் நட்சத்திரங்கள் ஆகிய நூல்களை ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உதவி இயக்குநா் பெரண... மேலும் பார்க்க

சோழவரத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

கலசப்பாக்கத்தை அடுத்த சோழவரம் ஸ்ரீமகா சத்தியநாதேச்சுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சோழவரம் கிராமத்தில் சிவகாமிசுந்தரி உடனாகிய மகா சத்தியநாதேச்சுவரா் கோயில் அ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: வியாபாரி கைது

செய்யாறு அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக வியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாற்றை அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் ... மேலும் பார்க்க

கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை

திருவண்ணாமலையில் கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்துக்கான உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது (படம்). ஸ்ரீபச்சையம்மன் கோயில் வளாகத்தில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் செங்கம் கிளைத் தலைவா் காமத் ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் சென்னாவரம் கிராமம் வழியாக சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராம ஏரி அருகே சந்தேகத்துகி... மேலும் பார்க்க