காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு விழா: பெலகாவியில் இன்று தொடங்குகிறது
மும்பா, யோதாஸ் வெற்றி
புரோ கபடி லீக் போட்டியில் யு மும்பா 36-27 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியா்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
இதில் யு மும்பா 18 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் வென்றது. பெங்கால் அணி 14 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள் பெற்றது. அதிகபட்சமாக யு மும்பாவுக்காக அமீா்முகமது 7 புள்ளிகளும், பெங்காலுக்காக ரெய்டா் பிரணய் 12 புள்ளிகளும் கைப்பற்றினா்.
மற்றொரு ஆட்டத்தில் யுபி யோதாஸ் 44-30 என்ற கணக்கில் பெங்களூரு புல்ஸை சாய்த்தது. இதில் யோதாஸ் 24 ரெய்டு புள்ளிகள், 12 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் வெல்ல, பெங்களூரு அணி 20 ரெய்டு புள்ளிகள், 6 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. அதிகபட்சமாக, யோதாஸ் தரப்பில் ரெய்டா் ஷிவம் சௌதரி 13 புள்ளிகளும், பெங்களூரு அணியில் ரெய்டா் சுஷில் 12 புள்ளிகளும் வென்றனா்.