செய்திகள் :

மும்பையில் ஆப்பிள் ஐபோனுக்காக சண்டையிட்ட இளைஞர்கள்

post image

மும்பையில் ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக கூடியிருந்த இளைஞர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 17 மாடலை இன்று அறிமுகப்படுதியுள்ளது. எந்தவொரு ஆப்பிள் ஸ்மார்ட்போனிலும் இல்லாத வகையில் மிகக்குறைந்த தடிமனில் (5.6 மி.மீ) இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது.

சாங்சங் கேலக்ஸி எட்ஜ் எஸ் 25 ஸ்மார்ட்போனைவிட (5.8 மி.மீ) இது குறைவாகும். இந்நிலையில் தில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஆப்பிள் ஸ்டார்களில் நேற்று நள்ளிரவு முதலே இளைஞர்கள் காத்திருந்தனர்.

ஆப்பிள் ஐபோன் 17 அறிமுகம்: நீண்ட வரிசையில் காத்திருக்கும் இளைஞர்கள்!

இன்று(செப்டம்பர் 19) ஐபோன் 17 அறிமுகப்படுத்தப்பட்டவுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

இந்த ஐபோனுக்காக இளைஞர்கள் சண்டையிட்டும் கொண்டனர். மும்பையின் பி.கே.சி ஜியோ சென்டரில் உள்ள ஆப்பிள் ஸ்டோரின் வெளியே ஐபோன் 17 வாங்குவதற்காக காத்திருந்த இளைஞர்களிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர்கள் தலையிட்டு அவர்களை சண்டையிலிருந்து விலக்கினர்.

The iPhone 17 launch in Mumbai turned chaotic when a scuffle broke out among fans at the BKC store. Watch the viral video and read about the frenzy that gripped the city.

வெடிகுண்டு மிரட்டல்: நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் சென்னையில் அவசர தரையிறக்கம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நடுவானில் பறந்துகொண்டிருந்த இண்டிகோ விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மும்பை-தாய்லாந்து இடையே செல்லும் இண்டிகோ விமானம் 176 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை மாலை மும்பைய... மேலும் பார்க்க

பரிசளிக்கப்பட்ட மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்ட மரக்கன்றை இன்று நட்டு வைத்தார். அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிப... மேலும் பார்க்க

ஒடிசா: இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளிகள் 7 பேர் கைது

ஒடிசாவில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு பிபின் ஜெனா பகை காரணமாக கொலை செய்யப்பட்டார். கடலோ... மேலும் பார்க்க

மணிப்பூரில் துணை ராணுவப் படை வாகனம் மீது துப்பாக்கிச்சூடு: வீரர் பலி

மணிப்பூரில் துணை ராணுவப் படை வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரர் ஒருவர் பலியானார். மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் துணை ராணுவப் படையினரின் வாகனத்தை குறிவைத்து ஆயுதமேந்திய கு... மேலும் பார்க்க

5 பிஎச்கே! செபி தலைவருக்கு ரூ. 7 லட்சம் வாடகையில் வீடு ஏற்பாடு!

செபி தலைவர் துஹின் காந்த பாண்டேவுக்கு ரூ. 7 லட்சம் வாடகையில் சொகுசு குடியிருப்பை செபி ஏற்பாடு செய்துள்ளது.மார்ச் மாதத்தில் செபி தலைவராகப் பதவியேற்ற துஹுன் காந்த பாண்டேவுக்கு சொகுசு குடியிருப்பை செபி ஏ... மேலும் பார்க்க

மேலும் 474 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை

தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத மேலும் 474 அரசியல் கட்சிகளை தோ்தல் ஆணையம் நீக்கியுள்ளது. ஒரு கட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அந்தக் கட்சி பதிவுசெய்யப்பட்ட கட்... மேலும் பார்க்க