Vidaamuyarchi: வெளியானது அஜித்தின் 'விடாமுயற்சி' பட ட்ரெய்லர்! - ரிலீஸ் தேதியும்...
மும்பையில் தொடரும் பணமோசடி; 24 சதவீத வட்டிக்கு ஆசைப்பட்டு 100 கோடியை இழந்த 3000 பேர்; பின்னணி என்ன?
மும்பையில் கடந்த வாரம்தான் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் டோரஸ் நகைக்கடை என்ற பெயரில் நகரில் முக்கிய இடங்களில் கடைகளைத் திறந்து பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்தனர். வாரம் 5 முதல் 12 சதவீத வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து 1000 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்துள்ளனர்.
அதோடு முதலீடுகளைக் கவரப் போலி வைரங்களைப் பரிசாகக் கொடுத்து ஏமாற்றி இருந்தனர். மோசடி செய்த இரண்டு பேரும் உக்ரைன் சென்றுவிட்ட நிலையில் மும்பையில் கடையை நிர்வகித்து வந்தவர்கள் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மேலும் ஒரு நிதி மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மும்பை காந்திவலி பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவர் MoneyEdge என்ற நிதி நிறுவனத்தில் ரூ.2.8 கோடி முதலீடு செய்திருந்தார். அந்நிறுவனம் மாதம் 24 சதவீதம் வட்டி தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் வரை நிதி நிறுவனத்திலிருந்து சரியான முறையில் வட்டி கிடைத்து வந்தது.
பொதுமக்கள் புகார்
திடீரென கடந்த ஜூன் மாதத்திலிருந்து வட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து ராகுல் இது தொடர்பாகப் புகார் செய்தார். ராகுல் மட்டுமல்லாது மும்பையில் மேலும் பல பகுதியிலிருந்து சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு எதிராகப் பொதுமக்கள் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் 2013 ஆம் ஆண்டிலிருந்து முலுண்ட் பகுதியில் ராஜீவ் ஜாதவ், ஹரிபிரசாத், பிரணவ், பிரியா ஆகியோர் சேர்ந்து பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி அளவுக்கு அதிகமாக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஹரிபிரசாத் மற்றும் பிரியா ஆகியோரை கைது செய்துள்ள போலீஸார், மேலும் இரண்டு பேரைத் தேடி வருகின்றனர்.
அவர்கள் மும்பை முழுவதும் 3,000 பேரிடம் ரூ. 100 கோடி வரை மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. ஹரிபிரசாத் இதற்கு முன்பு தனியார் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs