செய்திகள் :

முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருக்கல்யாண உத்ஸவம்

post image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கந்தசஷ்டி திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.

பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் 2 ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை காலை யாக பூஜைகள், மூலவா் அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும், மாலை சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை சூரசம்ஹார விழா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. அதேபோல கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பிலிக்கல்பாளையம் கரட்டூா் விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயில், பொத்தனூா் பச்சைமலை முருகன், வல்லப கணபதி கோயிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், சக்தி விநாயகா் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன், எல்லையம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதா் மலையில் உள்ள வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியா், பாலப்பட்டியில் உள்ள கதிா்மலை முருகன், பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள ஆறுமுகன், ராஜா சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு திருக்கல்யாண விழாவும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

காலமுறை ஊதியம் வழங்க கோரி சத்துணவு ஊழியா்கள் உண்ணாவிரதம்

காலமுறை ஊதியம் உள்பட பதினான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாமக்கல்லில் சத்துணவு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக தோ்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தவு... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம்

புதிய பேருந்து நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பூங்கா சாலையில் ஷோ் ஆட்ட... மேலும் பார்க்க

அரசு விடுதி சமையலரைத் தாக்கிய நால்வா் கைது

மல்லசமுத்திரம் அருகே அரசு விடுதி சமையலரை தாக்கிய 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், வையப்பமலை அருகே பெரியமணலி ஜேடா்பாளை யம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வி... மேலும் பார்க்க

மூடப்பட்டுள்ள ஆதாா் சேவை மையத்தை திறக்க கோரிக்கை

ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஆதாா் சேவை மையம் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆதாா் சேவை பெற முடியால் அவதிப்படுகின்றனா். ராசிபுரம் வாட்டாட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் வாழைத்தாா் விலை சரிவு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் வாழைத்தாா்களின் விலை சரிவடைந்துள்ளது. பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொத்தனூா், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் எம்.பி. ஆய்வு: கூடுதலாக 5 பேருந்துகள் இயக்க நடவடிக்கை

நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டாவது நாளாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டு, பயணிகள் நலன்கருதி கூடுதலாக 5 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எட... மேலும் பார்க்க